ஆஸ்துமா நோயாளிகளுக்கு உண்டாகும் மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்னைகளை தீர்க்கும் கஞ்சி
முதலில் சாமைஅரிசியை உடைத்து குருணையாக்கிக் கொள்ளவும்.
கறிவேப்பிலை சாமைக் கஞ்சி
தேவையான பொருட்கள்
சாமை அரிசி- 100 கிராம்
Advertisement
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி
சுக்கு - ஒரு துண்டு
திப்பிலி - 2
கருப்பு எள் - ஒரு ஸ்பூன்
உளுந்து - ஒரு ஸ்பூன்
பெருங்காயம் - சிறிதளவு
செய்முறை
- முதலில் சாமை அரிசியை உடைத்து குருணையாக்கிக் கொள்ளவும்.
- கறிவேப்பிலையை, சுக்கு, மிளகு, திப்பிலி, உளுந்து, கருப்பு எள் ஆகியவற்றை லேசாக வறுத்துக் கொள்ளவும்.
- வறுத்து வைத்துள்ளவற்றை ஒன்றாகச் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் சாமை குருணையை போட்டு வேக வைக்கவும்.
- நன்கு வெந்து கஞ்சி பதம் வந்தவுடன் அதில் அரைத்து வைத்துள்ள கறிவேப்பிலை விழுதை சேர்த்து நன்கு கலக்கி ஒரு கொதி வந்தவுடன் இறக்கி வைக்கவும்.
பயன்கள்
- இந்தக் கஞ்சியில் மருத்துவக் குணம் நிறைந்திருக்கும்.
- ஆகையால் இந்தக் கஞ்சியை ஆஸ்துமா நோயாளிகள் தினமும் ஒரு வேளை உணவாக உட்கொண்டு வந்தால் அவர்களுக்கு உண்டாகும் வயிறு உப்புசம் மற்றும் ஜீரணக் கோளாறு , மலச்சிக்கல் போன்ற பிரச்னைகளை தீர்க்கக் கூடிய அற்புதமானக் கஞ்சி
தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.
குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com