நீரிழிவு நோயாளிகள் உண்ணக் கூடிய உன்னதமானக் கஞ்சி
முதலில் கோதுமை மற்றும் புழுங்கலரிசியை முதல் நாள் இரவில் ஊற வைக்கவும்.
தேவையான பொருட்கள்
கோதுமை - 50 கிராம்
புழுங்கலரிசி - 50 கிராம்
பசும் பால் - 100 மி.லி
அக்ரூட் - 20 கிராம்
சாரைப் பருப்பு - 20 கிராம்
நெய் - 2 தேக்கரண்டி
பனங்கற்கண்டு - தேவையான அளவு
செய்முறை
Advertisement
- முதலில் கோதுமை மற்றும் புழுங்கலரிசியை முதல் நாள் இரவில் ஊற வைக்கவும்.
- காலையில் ஊற வைத்த கோதுமை மற்றும் புழுங்கலரிசியை ஒன்றாகச் சேர்த்து அரைத்துப் பிழிந்து பால் எடுக்கவும்.
- அக்ரூட் மற்றும் சாரைப் பருப்பு இரண்டையும் ஒரு வாணலியில் போட்டு இரண்டு தேக்கரண்டி நெய்யை விட்டு வறுக்கவும்.
- வறுத்து வைத்துள்ள பருப்புகளை பிழிந்து வைத்துள்ள பாலில் சிறிதளவு விட்டு அரைத்து விழுதாக்கிக் கொள்ளவும்.
- அரைத்த விழுதை எஞ்சியுள்ள முக்கால் பங்கு பாலில் கலந்து கொள்ளவும்.
- அனைத்தையும் பசும்பாலுடன் சேர்த்து அதனுடன் தேவையான அளவு பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வரவும்.
பயன்கள்
இந்தக் கஞ்சியை பல வருடங்களாக நீரிழிவு குறைபாட்டால் பாதிக்கப் பட்டவர்கள் ஒருவேளை உணவாக உண்ணுவது சிறந்த பலனைத் தரும் அற்புதமான கஞ்சி.
குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com