சிறுநீர் பாதையில் உண்டாகும் எரிச்சலை சீர் செய்யும் அற்புதமானக் கஞ்சி
முதலில் ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும்.
வெண் பூசணி பார்லிக் கஞ்சி
தேவையான பொருட்கள்
வெண் பூசணிக்காய் தோல், விதையுடன் நறுக்கித் துண்டாக்கியது - 100 கிராம்
பார்லி - 3 தேக்கரண்டி
தண்ணீர் - அரை லிட்டர்
உப்பு - தேவையான அளவு
Advertisement
செய்முறை
- முதலில் ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும்.
- பின்னர் நீரில் பார்லியைப் போட்டு வேக வைக்கவும்.
- பார்லி நன்கு வெந்தவுடன் அத்துடன் நறுக்கி வைத்துள்ள வெண்பூசணித் துண்டுகளையும், தேவையான அளவு உப்பும் சேர்த்து நன்கு வேக வைக்கவும்.
- நன்கு வெந்தவுடன் இறக்கி வைத்து மிதமான சூட்டில் குடித்து வரவும்.
பயன்கள்
- இந்தக் கஞ்சியை தொடர்ந்து 21 நாட்கள் குடித்து வந்தால் மண்ணீரல் பலப்படும்.
- மேலும் வெயில் காலங்களில் உண்டாகும் அதிகமான உஷ்ணத்தை தடுக்கும் ஆற்றல் உள்ள கஞ்சி.
- நீர்ச்சுருக்கு மற்றும் சிறுநீர் பாதையில் உண்டாகும் எரிச்சல் குறைபாட்டை சீர் செய்யும் அற்புதமானக் கஞ்சி.
குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com