உடல் எடை கூடவும், உடல் எடை குறையவும் உதவும் உன்னதமானக் கஞ்சி
ஒரு வாணலியில் அரைத்து வைத்துள்ள பொடியில் மூன்று ஸ்பூன் அளவு எடுத்து லேசாக வறுத்துக் கொள்ளவும்.
பார்லி கொள்ளுக் கஞ்சி
தேவையான பொருட்கள்
பார்லி - 100 கிராம்
கொள்ளு - 100 கிராம்
சுக்குத் தூள் - சிறிதளவு
மிளகுத் தூள் - சிறிதளவு
மோர் - 100 மி.லி
எலுமிச்சம் பழச் சாறு தோலோடு - 10. மி.லி
செய்முறை
Advertisement
- முதலில் பார்லி மற்றும் கொள்ளை சுதத்தப்படுத்தி அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- ஒரு வாணலியில் அரைத்து வைத்துள்ள பொடியில் மூன்று ஸ்பூன் அளவு எடுத்து லேசாக வறுத்துக் கொள்ளவும்.
- பிறகு ஒரு பாத்திரத்தில் வறுத்து வைத்துள்ள பொடியை போட்டு அதில் தேவையான அளவு மெதுவாக கெட்டிப் படாமல் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கிளறவும்.
- மாவு நன்கு வெந்து கஞ்சி பதம் வந்தவுடன் அதில் தேவையான அளவு உப்பு மற்றும் மோர் சேர்த்து நன்கு கலக்கி இறக்கி வைக்கவும்.
- அதில் சுக்கு, மிளகுத் தூள், மற்றும் எலுமிச்சம் பழச்சாறு கலந்து பருகவும்.
- இந்த கஞ்சி உடல் எடை குறைய உதவும்.
- அதே மாவில் தண்ணீருக்குப் பதிலாக பாலை கலந்து வேக வைத்து கஞ்சியாக்கி அதில் தேவையான அளவு தேன் அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்து பருகினால் உடல் எடை கூடும்.
பயன்கள்
இந்தக் கஞ்சி உடல் எடையை குறைக்கவும். உடல் பயிற்சியினால் எடை குறைந்தவர்கள் உடல் எடை கூடவும் உதவும் கஞ்சி.
தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.
குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com