உணவே மருந்து

காய்ச்சலை குணப்படுத்த உதவும் உன்னதமான உணவுக் கஞ்சி

கோவை பாலா

சுக்கு அரிசி கஞ்சி

தேவையான பொருட்கள்

அரிசி நொய் - 100 கிராம்
சுக்கு - 10  கிராம்
கொத்தமல்லி (தனியா) - 10  கிராம்
சிற்றாமுட்டி - 10  கிராம்
கோரைக் கிழங்கு -  10  கிராம்
தண்ணீர் -   ஒரு லிட்டர்

செய்முறை : முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். அந்த தண்ணீரில் சுக்கு, சிற்றாமுட்டி, கோரைக் கிழங்கு மற்றும் கொத்தமல்லி (தனியா) ஆகியவற்றை நன்கு தட்டி தண்ணீருடன் சேர்த்து நன்கு காய்ச்ச வேண்டும். பின்பு நன்கு காய்ச்சிய தண்ணீருடன் அரிசி நொய்யைச் சேர்த்து மெதுவாக கிளறி கஞ்சியாக  தயாரித்து  இறக்கிக் கொள்ளவும்.

பயன்கள் : இந்தக் கஞ்சியை  காய்ச்சலால் பாதிக்கப் படும்பொழுது  தயார் செய்து உணவாக குடித்து வந்தால் எந்த விதமான காய்ச்சலையும் குணப்படுத்தும் ஆரோக்கியம் நிறைந்து உன்னத கஞ்சி. தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவையில் பலத்தக் காற்று: வாகன ஓட்டிகள் அவதி

துருக்கியின் வா்த்தகத் தடை: இஸ்ரேல் பதில் நடவடிக்கை

மக்களவை 3-ஆம் கட்டத் தோ்தல் பிரசாரம் இன்று நிறைவு

கஞ்சா விற்றவா் கைது

அமெரிக்காவின் 4 தொலைதூர ஏவுகணைகள் அழிப்பு: ரஷியா

SCROLL FOR NEXT