உணவே மருந்து

குழந்தைகளுக்கான ஊட்டச் சத்து மிக்க உன்னத உணவு

கோவை பாலா

கேழ்வரகு பயத்தம் பருப்பு கஞ்சி

தேவையான பொருட்கள்
 
கேழ்வரகு - 200  கிராம்
பயத்தம் பருப்பு - 250  கிராம்
பொட்டுக் கடலை - 150  கிராம்
நிலக் கடலை - 100  கிராம்
வெல்லம் - 30  கிராம்

செய்முறை : முதலில் கேழ்வரகையும், பயத்தம் பருப்பையும் தனித் தனியே நன்கு வறுத்துக் கொள்ளவும். நிலக்கடலை மற்றும் பொட்டுக்கடலையும் சுத்தப்படுத்தி வறுத்துக் கொள்ளவும். பின்பு வறுத்து வைத்துள்ள அனைத்துப் பொருட்களையும் ஒன்றாக்கி அரைத்து மாவாக்கிக் கொள்ளலாம். பின்பு கஞ்சி செய்யும் பொழுது 50 கிராம் அரைத்து வைத்துள்ள மாவை எடுத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கஞ்சியாக காய்ச்சி அதனுடன்  வெல்லத்தை தூளாக்கி கலந்து கஞ்சி தயாரித்து  குடிக்கலாம்.

பயன்கள் : இந்தக் கஞ்சியை  தினமும் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் குழந்தைகளுக்களின் உடலுக்கு மிகுந்த வன்மையையும் , ஊட்டச் சத்தையும்  அள்ளித் தரும் அற்புத உணவு. தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

SCROLL FOR NEXT