உணவே மருந்து

உடல் சூட்டினால் பாதிக்கப்படுபவர்களுக்கான வெண்பூசணிக்காய் விதைக் கஞ்சி

முதலில் வெண் பூசணிக்காய் விதையின் பருப்பை எடுத்துக் கொள்ள வேண்டும்.

கோவை பாலா

 
தேவையான பொருட்கள்
 
வெண்பூசணி விதை - 50 கிராம்
புழுங்கலரிசி நொய் - 50 கிராம்
தண்ணீர், உப்பு - தேவையான அளவு
மோர் - தேவையான அளவு

செய்முறை

  • முதலில் வெண்பூசணிக்காய் விதையின் பருப்பை எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் புழுங்கலரிசி நொய் மற்றும் விதையைச் சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
  • நொய்யரிசி நன்கு வெந்ததும் அதனுடன் தேவையான அளவு உப்புப் போட்டு கலந்து இறக்கிக் கொள்ளவும்.
  • பின்பு மோர் சேர்த்துக் குடிக்கவும்

பயன்கள்

இந்த கஞ்சி உணவு நீரிழிவு நோயினர் மற்றும் வயிற்றுப் புண் உள்ளவர்கள் தினந்தோறும் எடுத்துக் கொள்ள வேண்டிய உன்னத உணவுக் கஞ்சி. மேலும் இந்தக் கஞ்சியை அதிக உடல் சூட்டினால் பாதிக்கப்பட்டவர்கள் குடித்து வந்தால் உடல் சூட்டையும் தணிக்கும் அற்புத உணவு.மேலும் அதிக தாக உணர்வையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் நிறைந்த கஞ்சி.

படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு 

அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

வடதமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி தொடங்கியது! தேவையான ஆவணங்கள் என்ன?

இரட்டை இலை விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு செங்கோட்டையன் கடிதம்!

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

SCROLL FOR NEXT