உணவே மருந்து

பெண்கள் வைன் குடிப்பது நல்லதா? கெட்டதா?

தினமணி

வைன் (wine) மட்டுமல்லாமல் ஹாட் ட்ரிங்க்ஸ் குடிக்கும் பழக்கம் பெண்களிடையே பரவி வருகிறது. கல்லூரி பெண்கள், பப், பார்டிகளுக்குச் செல்லும் மேல் தட்டுக் கல்லூரி பெண்கள் என வைன் என்பது குளிர்பானம் போன்றதாகிவிட்டது.

பெண்கள் வைன் சாப்பிடலாம், ஒரு 120 எம் எல். தினமும் குடிப்பதால் சருமத்துக்கு நல்லது, இதயத்துக்கு நல்லது என்றெல்லாம் யார் சொன்னார்கள்? சில பத்திரிகைகளும் அதை செய்தியாக வெளியிட்டு உள்ளது. வைனில் பாலிஃபினால் இருக்கிறது அது உடல் நலத்துக்கு மிகவும் தேவை என்கிறார்கள். ஆனால் உண்மையில் வைனில் 20 சதவிகிதம் ஆல்கஹாலும் உள்ளது என்பதை எப்படி இவர்கள் மறக்கலாம். தவறே இல்லை, கொஞ்சமாக குடிக்கலாம் என்று சொன்னவர் யார்? இது கலாச்சார சீர்கேடினை முன்வைப்பது மட்டுமல்லாமல் பெண்கள் குடிப்பதை நியாயப்படுத்தும் செயல்.

ஆண்கள் பெண்கள் யாராக இருந்தாலும் மதுப்பழக்கம் உடல் நலத்துக்கு ஏற்றதல்ல என்பதுதான் உண்மை. அதுவும் கொஞ்சமாக குடிக்கத் தொடங்கி அதற்கு அடிமையாகிவிடும் நிலைதான் இங்கு பலரிடம் நாம் காண்கிறோம். மதுப்பழக்கத்தை ஊக்குவிப்பதால் அந்த வியாபாரிகளுக்கு நல்லது அவ்வளவுதான். மற்றபடி அது உடல்நலத்துக்கு நல்லது என்று வணிகப்படுத்துவது சரியல்ல. வைனில் இருக்கும் அதே பாலிஃபெனால் க்ரீன் டீயிலும் உள்ளது. அதை குடிக்கலாம் அல்லவா?

நம் ஊறில் கிடைக்கக்கூடிய சிவப்பு பப்பாளி, முருங்கைகீரையில் இல்லாத சத்துக்களே இல்லை. ஒரு மிகப் பெரிய வியாபார தந்திரம் வேக வேகமாக நம் உணவுகள் மறுத்து வருகிறது.

வெள்ளைச் சர்க்கரையைத் தவிர்த்துவிட்டு நாட்டு வெல்லம் (கெமிக்கல் சேர்க்காமல் உள்ள வெள்ளம் பழுப்பு நிறத்தில் உதிரியாக இருக்கும்), பனங்கற்கண்டு சாப்பிடலாம். அது பெண்களின் உடல்நலத்துக்கு நல்லது. இரும்புச் சத்து மட்டுமல்லாமல் பலவிதமான சத்துக்கள் அதில் உள்ளன. கடைகளில் கிடைக்கும் சர்க்கரை எல்லாமே க்ரிஸ்டலைட் சுகர், அதாவது வெள்ளையாக்கப்பட்ட சர்க்கரை. அதை சாப்பிடுகையில் நேரகாக ரத்தத்தில் சேரும். அது உடல்நலத்துக்கு கெடுதல்.

மாறாக பனை வெல்லம் சாப்பிடும்போது அது மெதுவாக ரத்தத்தில் சேரும். நாட்டு வெல்லம் சத்தாக மாறி ரத்தத்தில் சேர 40 நிமிஷமாகும். மெதுவாக உடலில் சர்க்கரை சேரும் போது அதிக பாதிப்பு இருக்காது. ஆனால் இந்த வெள்ளைச் சர்க்கரை உடனடியாக் க்ளூகோஸாக மாறி அதிக பாதிப்புக்களை ஏற்படுத்திவிடும்.

உப்பை எடுத்துக் கொண்டால், நேஷனல் ஐயோடின் பாலிஸி என்கிறார்கள். இப்போது நாம் சாப்பிடுவது சரியான உப்பா? நிச்சயம் இல்லை. அது சோடியம் க்ளோரைட் என்ற அமிலம். அதைத்தான் உணவில் சேர்த்து தினமும் சாப்பிடுகிறோம். நாம் எளிதாகக் கிடைக்கக் கூடிய கல் உப்பைத்தான் சாப்பிட வேண்டும். அதில்தான் கடல்சார் நுண்ணிய கனிமங்கள் பல உள்ளன. சந்தையில் கிடைக்கும் இந்த ஐயோடைஸ்ட் சால்ட் ரத்தக் கொதிப்புக்கு காரணம் என்கிறார்கள்.

சந்தையை முன்னிறுத்தி வணிகப்படுத்துவதால் உப்பு, சர்க்கரை என அடிப்படையான விஷயங்களில் கூட நோயை உருவாக்க்கும் கூறுகள் அதிகமுள்ளன. எனவே இவற்றைத் தவிர்த்து நம் மண்ணில் இயற்கையாக கிடைக்கும் இனிப்பு மற்றும் உப்பை உணவில் சேர்த்தால் ஆரோக்கியம் மேம்படும்.

கிவி, க்ரீன் ஆப்பிள், ட்ராகன் ஃபுட், ஸ்டாராபெரி உள்ளிட்ட வெளிநாட்டு பழங்கள் என்றைக்கோ பறிக்கப்பட்டு, நைட்ரஜன் ப்ளஷிங் செய்யப்பட்டு, சில பல வேதியல் விஷயங்கள் சேர்க்கப்பட்டு, குளிர்பதன வண்டியில் அடைக்கப்பட்டு நெடுந்தூரம் பயணித்து, நம்மூருக்கு வந்து சேர கிட்டத்தட்ட 40 லிருந்து 60 நாட்கள் ஆகிவிடும். அதன் பிறகு அது கடைகளில் டீப் ப்ரீஸரில் வைக்கப்பட்டு நமக்கு விற்கப்படுகிறது. அதில் என்ன சத்துக்கள் இருக்க முடியும். மாறாக நம் கிராமப்புறங்களில் விளைந்த பழங்கள் ஒரே நாளில் கடைகளில் கிடைக்கிறது. அதில்தான் இயற்கையாக நிறைய சத்துக்கள் இருக்கும். மேலும் நம் மண்ணில் விளைந்தவைதான் நம் உடலுக்கு உகந்தது.

தேசிய உணவுக் கழகத்தின் பரிந்துரையின்படி எந்தக் கனி சிறந்த கனி என்றால் அது நம் ஊரில் கிடைக்கும் சிவப்பு கொய்யாதான். அதாவது நாட்டு கொய்யா. அதில்தான் எல்லா சத்துக்களும் நிறைந்ததுள்ளது. அந்தப் பழத்துக்கு இருக்கும் சத்துக்கள் வேறு எதற்கு இல்லை என்பதுதான் உண்மை.புற்றுநோயை தடுக்கக் கூடிய லைகோபின் அதில் உள்ளது. 

உணவில் அரிசியைத் தவிர்த்து, சிறுதானியங்கள் பயன்படுத்துவதும் உடல்நலத்துக்கு நல்லது. தினை, ராகி, கம்பு, சோளம் உள்ளிட்ட தானியங்களில் செலினியம், மாங்கனீஸ், மற்றும் பல்வேறு நார்ச்சத்து, உடலுக்கு நன்மை செய்யும் பாலிஃபனால் ஆகியவை உள்ளது. உணவு குறித்த விழிப்புணர்வுடன் அனைவரும் நம் இயல்புக்கும் இயற்கைக்கும் மாறினால் நீண்ட நாள் நோய் நொடியின்றி வாழலாம்.

நன்றி - மருத்துவர் கு.சிவராமன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வி.கே.புரம் அருகே தொழிலாளியை தாக்கியதாக இளைஞா் கைது

திடியூரில் உயிரிப் பல்வகைமை தின கொண்டாட்டம்

பாபநாசம் வனச் சரகத்தில் ஓரே வாரத்தில் கூண்டில் சிக்கிய 4ஆவது சிறுத்தை -கிராம மக்கள் அச்சம்

தோரணமலையில் பௌா்ணமி கிரிவலம்

அகஸ்திய மலை சரணாலயத்தில் யானைகள் கணக்கெடுப்புத் தொடக்கம்

SCROLL FOR NEXT