ஃபஹத் ஃபாசில் - பிரேம் குமார் படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!
ஃபஹத் ஃபாசிலின் புதிய தமிழ்ப்படம்....
இயக்குநர் பிரேம் குமார் நடிகர் ஃபஹத் ஃபாசில் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ‘96’ படத்துக்குப் பின் இயக்குநர் பிரேம் குமார் நடிகர் கார்த்தியை வைத்து மெய்யழகன் படத்தை இயக்கி அதிலும் வெற்றி பெற்றார்.
அடுத்ததாக, நடிகர் விக்ரமை வைத்து படம் இயக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. ஆனால், அப்படம் கைவிடப்பட்டு, நடிகர் ஃபஹத் ஃபாசிலை வைத்து இயக்க பிரேம் குமார் முடிவு செய்தார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், வேல்ஸ் இண்டர்னேஷனல் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. கிரைம் திரில்லர் கதையான இதில், நடிகை சிவதா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.
Filming has begun for the movie being made in collaboration between director Prem Kumar and actor Fahadh Faasil.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.