டேர் டெவில் பூஜை... கலந்துகொள்ளாத அஜித்!
டேர் டெவில் திரைப்பட பூஜையில் அஜித் பங்கேற்காதது குறித்து...
டேர் டெவில் பூஜையில் நடிகர் அஜித் குமார் கலந்துகொள்ளவில்லை.
நடிகர் அஜித் குமார் குட் பேட் அக்லியைத் தொடர்ந்து மீண்டும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ’டேர் டெவில்’ என்ற திரைப்படத்தில் நடிக்கிறார். இதில், நாயகியாக ஸ்ரீலீலாவும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர்கள் பார்த்திபன், பிரபு, சுனில் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
டேர் டெவில் திரைப்படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. இதில், தயாரிப்பாளார் ஷாலினி, இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், நடிகர்கள் பார்த்திபன், பிரபு, சுனில், உன்னி முகுந்தன் இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Advertisement
Advertisement
பிரபல மலையாள நடிகர் உன்னி முகுந்தனும் இப்படத்தில் இணைந்துள்ளதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது.
ஆனால், திரைப்படத்தின் நாயகனான நடிகர் அஜித் குமார் இந்தப் பூஜையில் கலந்துகொள்ளவில்லை. கார் பந்தயப் பயிற்சியில் வெளிநாட்டில் இருக்கலாம் எனத் தெரிகிறது. இவர் நேரடியாக நவ. 12 ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்துகொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Actor Ajith Kumar did not attend the Dare devil pooja.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.