ஃபஹத் ஃபாசில் - பிரேம் குமார் திரைப்படத்தின் அப்டேட்!
ஃபஹத் ஃபாசில் - பிரேம் குமார் கூட்டணி திரைப்படம் குறித்து...
நடிகர் ஃபஹத் ஃபாசில் நடித்துவரும் புதிய திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.
விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ‘96’ படத்துக்குப் பின் இயக்குநர் பிரேம் குமார் நடிகர் கார்த்தியை வைத்து மெய்யழகன் படத்தை இயக்கினார்.
அப்படம் வெற்றி பெற்ற நிலையில், அடுத்ததாக விக்ரமை வைத்து படம் இயக்கவுள்ளதாக அறிவித்திருந்தார். ஆனால், அப்படம் கைவிடப்பட்டதால் நடிகர் ஃபகத் ஃபாசிலை வைத்து தனது அடுத்தப் படத்தை பிரேம் குமார் இயக்கி வருகிறார்.
Advertisement
Advertisement
வேல்ஸ் இண்டர்னேஷனல் தயாரிக்கும் இப்படத்தில் நடிகை ஷிவதா நாயகியாக நடிக்கிறார். கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் தொடங்கியது.
இந்த நிலையில், இப்படத்தின் முக்கிய அறிவிப்பு நாளை (நவ. 23) மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது இப்படத்தின் பெயர் போஸ்டராக இருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது.