முகப்பு
உணவே மருந்து

இளைத்த உடலை தேற்ற உதவும் அருமருந்து

உடலுக்கு வலிமை மற்றும் ஆரோக்கியத்தை கொடுக்கக் கூடியதாகவும், இளைத்த உடலை தேற்றுவதற்கும்  உதவும் அருமருந்தாகும்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:16 PM
பகிர்:

தேவையான பொருட்கள்

வல்லாரைக் கீரை (காய்ந்தது)  -  250 கிராம்

அமுக்கரா கிழங்குத்தூள்.   -   100 கிராம்.

Advertisement

செய்முறை

முதலில் தேவையான அளவு வல்லாரைக் கீரையை எடுத்து சுத்தப்படுத்தி மிதமான வெயிலில் நன்கு உலர வைத்து எடுத்துக் கொள்ளவும். நன்கு உலர்ந்தப் பின்பு அதனை அரைத்து தூளாக்கிக் கொள்ளவும். பின்பு வல்லாரைத்தூளுடன் அமுக்கராகிழங்குத்தூளையும் ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்.

பயன்கள்

இந்த சூரணம் உடலுக்கு வலிமை மற்றும் ஆரோக்கியத்தை கொடுக்கக் கூடியதாகவும் மேலும் இளைத்த உடலை தேற்றுவதற்கும்  உதவும் அருமருந்தாகும்.

மேற்கூறிய ஆரோக்கியத்தைப் பெறவேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த சூரணத்தை தயார்செய்து  காலை மாலை என இருவேளையும் தலா இரண்டு கிராம் அளவு எடுத்து சாப்பாட்டிற்கு முன்பு  தேனில்  குழைத்து சாப்பிட்டு வரவும்.

நீங்கள் எடுத்துக் கொண்டியிருக்கிற மருந்துகளோடு இதனை  எடுத்துக் கொள்ளலாம்.

இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேகவைத்து   உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும்
வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும். 

- கோவை பாலா

இயற்கை மருத்துவம் மற்றும் உணவு வழி(காய்கறி) மருத்துவ ஆலோசகர்.

Cell: 96557 58609, 75503 24609

Covaibala15@gmail.com 

Kovai Bala YouTube channel :

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments