gastric problem 
உணவே மருந்து

வாய்வுத் தொல்லையை தீர்க்க உதவும் அருமருந்து

நாட்பட்ட வாய்வு சார்ந்த குறைபாடுகளால் துன்பப்படுபவர்களுக்கு அதிலிருந்து குணமாக வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது உதவும்.

தினமணி

தேவையான பொருட்கள்

முருங்கைக் கீரை.              -    ஒரு கட்டு (தேவையான அளவு)

மஞ்சள் .   -   சிறிதளவு

பூண்டுப் பல்.  -   20

உப்பு.         -   தேவையான அளவு

செய்முறை

முதலில் தேவையான அளவு முருங்கைக் கீரையை  எடுத்து ஆய்ந்து பழுப்பு இலைகளை நீக்கி  சுத்தப்படுத்தி எடுத்துக் கொள்ளவும். பூண்டுப் பல்லை ஒன்றிரண்டாக நறுக்கிக் கொள்ளவும்.

சுத்தப்படுத்தி ஆய்ந்து வைத்துள்ள முருங்கைக் கீரையை இட்லி பாத்திரத்தில் வைத்து  அதில் பூண்டு பல்லையும் சேர்த்து நீராவியில் வேக வைத்துக் கொள்ளவும்.

ஒரு மண் சட்டியில் சிறிதளவு நெய் ஊற்றித் தாளித்து அடுப்பை அணைத்து அதில் நீராவியில் வேகவைத்த முருங்கைக் கீரை மற்றும் பூண்டு பல்லைச் சேர்த்து சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்புச் சேர்த்து நன்கு கலந்து பொறியலாக தயார் செய்து எடுத்துக் கொள்ளவும்.

தீரும் குறைபாடுகள்

நாட்பட்ட வாய்வுச் சார்ந்த குறைபாடுகளால்  துன்பப்படுபவர்களுக்கு அதிலிருந்து குணமாக  வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு உதவும் அற்புதமான கீரை.

சாப்பிடும் முறை

இவ்வாறு தயாரித்து வைத்து எடுத்துள்ள  முருங்கைக் கீரை பூண்டுப் பொறியலை ஒரு வேளை உணவாகவே எடுக்கவும். ஒருநாள் விட்டு ஒரு நாள் என 48 நாட்கள் எடுக்கவும். 

இரவு படுக்கப் போகும் முன்

வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று விழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து   உணவாகச் சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

-கோவை பாலா 

இயற்கை மருத்துவம் மற்றும் உணவு வழி(காய்கறி) மருத்துவ ஆலோசகர்.
Cell  :  96557 58609 ,  75503 24609

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தினம் தினம் திருநாளே!

சுமை ஆட்டோ மோதி தொழிலாளி பலி

முகமது சின்வார் கொல்லப்பட்டார்: ஒப்புக்கொண்ட ஹமாஸ்!

வெண்கலப் பதக்கம் வென்றது சாத்விக்/சிராஷ் இணை!

உலக தடகள சாம்பியன்ஷிப்: 19 பேருடன் இந்திய அணி

SCROLL FOR NEXT