உணவே மருந்து

ரத்த சோகையைத் தீர்க்க உதவும் அருமருந்து

தினமணி

தேவையான பொருட்கள்

அரைக் கீரை.   -  ஒரு கட்டு

சிறு  பருப்பு.     -   50 கிராம்

செய்முறை

முதலில் தேவையான அளவு அரைக் கீரையை ஆய்ந்து பழுப்பு இலைகளை நீக்கி  சுத்தப்படுத்தி எடுத்துக் கொள்ளவும். சிறு பருப்பை சுத்தப்படுத்தி வேகவைத்துக் கொள்ளவும். ஆய்ந்து வைத்துள்ள அரைக் கீரையை நீராவியில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில்   சிறிதளவு நெய் ஊற்றி அதில் தாளிப்பதற்குண்டான பொருட்களை சேர்த்து தாளித்து அடுப்பை அணைத்து அதில் வேகவைத்துள்ள சிறுபருப்பு மற்றும் ஆரைக்கீரையைச் சேர்த்து நன்கு கிளறி எடுத்துக் கொள்ளலாம்

தீரும் குறைபாடுகள்

ரத்த உற்பத்தியை அதிகரித்து ரத்த சோகை குறைபாட்டைத் தீர்க்க உதவும்.

சாப்பிடும் முறை

அரைக்கீரைப் பொறியலை தினமும் ஒரு வேளை உணவாக குறைந்தபட்சம் 21 நாட்களாவது சாப்பிட்டு வரவும்.

இரவு படுக்கப் போகும் முன்

வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று விழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து   உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக  மிளகையும் பயன்படுத்தவும்.

- கோவை பாலா

இயற்கை மருத்துவம் மற்றும் உணவு வழி(காய்கறி) மருத்துவ ஆலோசகர்.

Cell  :  96557 58609   ,  75503 24609
Covaibala15@gmail.com  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கும் சாய் பல்லவி?

மக்களவை தேர்தல்: 2 மாதங்களில் 4.24 லட்சம் புகார்கள்!

நடப்பு ஐபிஎல் தொடரில் சரியாக விளையாடவில்லை, ஆனால்... மனம் திறந்த ரோஹித் சர்மா!

இயந்திரக் கோளாறு - 167 பேருடன் திருச்சியில் தரையிறங்கிய விமானம்

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT