உணவே மருந்து

பசியின்மையை போக்கி நல்ல பசி உணர்வைத் தூண்டும் அருமருந்து

தினமணி

தேவையான பொருட்கள்

முளைக்கீரை    -  ஒரு கட்டு (100 கிராம்)

மிளகு       -   15

சீரகம்      -   ஒரு ஸ்பூன்

பூண்டு     -    10 பல்

சின்ன வெங்காயம்  -   5

மஞ்சள் தூள்   -   சிறிதளவு

செய்முறை

முதலில் தேவையான அளவு முளைக் கீரையை எடுத்து ஆய்ந்து  பழுப்பு இலைகளை நீக்கி  சுத்தப்படுத்தி எடுத்துக் கொள்ளவும். மிளகு, பூண்டு இரண்டையும் தேவையான அளவு எடுத்து ஒன்றிரண்டாக   சிதைத்துக் கொள்ளவும்.

சின்ன வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும். ஒரு மண் சட்டியில் ஆய்ந்த முளைக்கீரை, மிளகு, பூண்டு, சின்ன வெங்காயம், சீரகம் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாகக் கொதிக்க வைத்து தண்ணீர் சுண்டும் வரை கொதிக்க வைத்து பின்பு நன்றாகக் கலக்கி எடுத்துக் கொள்ளவும்.

தீரும் குறைபாடுகள்

நீண்ட நாள் பசியின்மையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இயற்கையான முறையில் நன்கு பசியுணர்வை அதிகரிக்க உதவும். 

சாப்பிடும் முறை

இவ்வாறு கொதிக்க வைத்து எடுத்துள்ள முளைக் கீரையை தினமும் ஒரு வேளை உணவாகவே எடுத்துக் கொள்ளவும். குறைந்த பட்சம் 21 நாட்களாவது எடுக்க வேண்டும்.

இரவு படுக்கப் போகும் முன்

வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று விழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து   உணவாகச் சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா,

இயற்கை மருத்துவம் மற்றும் உணவு வழி(காய்கறி) மருத்துவ ஆலோசகர்.

Cell  :  96557 58609, 75503 24609
Covaibala15@gmail.com 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

SCROLL FOR NEXT