உணவே மருந்து

உடல் எடையை அதிகரிக்க உதவும் அருமருந்து

உடல் எடையை அதிகரிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு  உதவக் கூடிய அருமருந்து இது.

தினமணி

தேவையான பொருட்கள்

பொன்னாங்கண்ணிக் கீரை. - 200 கிராம்.

பாசிப் பருப்பு.      -   100 கிராம்

நெய்          -   தேவையான அளவு

செய்முறை

முதலில் தேவையான அளவு பொன்னாங்கண்ணிக் கீரை எடுத்து ஆய்ந்து பழுப்பு இலைகளை நீக்கி  சுத்தப்படுத்தி எடுத்துக் கொள்ளவும். பாசிப் பருப்பை சுத்தப்படுத்திக் கொள்ளவும்.

சுத்தப்படுத்திய பொன்னாங்கண்ணிக் கீரையை இட்லி பாத்திரத்திரத்தின் மேல்தட்டில் வைத்து  இட்லி பாத்திரத்தின் உள்ள நீரில் பாசிப்பருப்பைப் போட்டு  நீராவியில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு மண் சட்டியில் தேவையான அளவு நெய் ஊற்றி தாளித்து அதில் நீராவியில் வேகவைத்த பொன்னாங்கண்ணிக் கீரை , பாசிப்பருப்பு போட்டு ஒரு வதக்கி எடுத்துக் கொள்ளவும்.

தீரும் குறைபாடுகள்

உடல் எடையை அதிகரிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு  உதவக் கூடிய கீரை. உடலை வலிமையாக்கவும் மற்றும் எலும்புகளின் உறுதிக்கும்  உதவக்கூடிய கீரை. 

சாப்பிடும் முறை

இவ்வாறு மேற்கூறியமுறையில் தயாரித்த  பொன்னாங்கண்ணிக் கீரைப் பொரியலை தினமும் ஒரு வேளை உணவாகவே எடுத்துக் கொள்ளவும். ஒரு மாதங்கள் சாப்பிடவும். பின்பு தேவைக்கேற்ப தொடரவும்.

இரவு படுக்கப் போகும் முன்

வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து   உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக  மிளகையும்
பயன்படுத்தவும்.

- கோவை பாலா

இயற்கை மருத்துவம் மற்றும் உணவு வழி(காய்கறி) மருத்துவ ஆலோசகர்.
Cell  :  96557 58609,  75503 24609
Covaibala15@gmail.com  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூலி இசை வெளியீட்டு விழாவில் ஆமிர் கான்!

ஜோ ரூட்டை வம்பிழுத்தது ஏன்? பிரசித் கிருஷ்ணா விளக்கம்!

தேர்தல் ஆணையத்துக்கு எதிராக ஆதார அணுகுண்டை வெடிக்கச் செய்யுங்கள்: ராகுலுக்கு ராஜ்நாத் சவால்!

உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன் அன்புமணிதான்! - ராமதாஸ்

பசி, பட்டினி, வலி, அச்சம்... காஸாவில் மக்கள் ஒரு நாளை எப்படிக் கழிக்கிறார்கள்?

SCROLL FOR NEXT