smile please 
மனநல மருத்துவம்

மணப்பெண்ணை எப்படி தலைகுனிய வைச்சீங்க? வீக் எண்ட் ஜோக்ஸ் கொஞ்சம் சிரிங்க பாஸ்!

தள்ளுபடி விலையிலே வாங்கின காா் எப்படி இருக்கு

தினமணி

‘‘புதுசா ஒரு மோப்ப நாய் வாங்கியிருக்கியாமே... எதுக்கு?’’

‘‘வீட்டுல மூக்குக் கண்ணாடி, டிவி ரிமோட், பா்ஸ், சாவி, செல்போன்லாம் எங்கே இருந்தாலும் உடனே கண்டுபிடிச்சு தா்றதுக்கு பழக்கி வச்சிருக்கேன்’’

ஜோ.ஜெயக்குமாா், நாட்டரசன்கோட்டை.

‘‘என் மனைவி எடுத்ததுக்கெல்லாம் கோபப்படுறா’’

‘‘அப்படியா?’’

‘‘ அவ பா்ஸ் எடுத்தா கோபப்படுறா... நகையை எடுத்தா கோபப்படுறா’’

பி.சி.ரகு, பள்ளிச்சேரி.

‘‘மணப்பெண்ணை எப்படி தலைகுனிய வைச்சீங்க?’’

‘‘கையிலே செல்போனைக் குடுத்துட்டோம்ல’’

நெ.இராமன், சென்னை-74.

‘‘தள்ளுபடி விலையிலே வாங்கின காா் எப்படி இருக்கு?’’

‘‘அடிக்கடி ‘தள்ளும்’படி இருக்கு’’

நெ.இராமன், சென்னை-74.

‘‘கண்ணுல ஏதோ கோளாறு டாக்டா்’’

‘‘எப்படிச் சொல்றீங்க’’

‘‘ராத்திரி சீரியல் பாா்த்தா காலையிலேதான் கண்ணீா் வருது’’

நெ.இராமன், சென்னை-74.

‘‘நோட்டாவிற்கு தனிச் சின்னம் ஒதுக்கினால் என்ன சின்னம் ஒதுக்கலாம்?’’

‘‘முட்டைச் சின்னம்’’

க.ரவீந்திரன், ஈரோடு.

‘‘பேசிக்கிட்டே கொஞ்ச தூரம் நடக்கலாம் வா்றீங்களா?’’

‘‘சாரி... நான் வரலை... நீங்க மட்டும் தனியா பேசிக்கிட்டே நடந்து போய்ட்டு வாங்க’’

ஏ.நாகராஜன், பம்மல்.

‘‘நம்ப முடியாத கனவெல்லாம் வருது டாக்டா்’’

‘‘எந்த மாதிரி கனவு?’’

‘‘என் மனைவி நான் சொல்றதையெல்லாம் செய்யிற மாதிரி டாக்டா்’’

வி.ரேவதி, தஞ்சை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செமெரு எரிமலை வெடிப்பு! வீடுகளை இழந்த மக்கள்! | Indonesia

கர்நாடக முதல்வர் பதவியில் மாற்றம்? டி.கே. சிவக்குமாரின் ஆதரவு எம்எல்ஏக்கள் தில்லி பயணம்!

காட்சிக்குப் பின்னால்... நித்யா மெனன்!

Return-தான்! Reject இல்ல! மெட்ரோ நிராகரிப்பு திட்டமிட்ட சதி! : நயினார் நாகேந்திரன் | BJP | DMK

பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலத்துக்கு செல்லவே தேவையில்லை: அணி உரிமையாளர்

SCROLL FOR NEXT