மகளிர் நலம்

ரத்த சோகையை குணப்படுத்திவிடலாம்!

‘பதினொரு  வயதில் இருந்து 35 வயதுக்குள் பெண்கள் பூப்படைதல், திருமணம், குழந்தைப்பேறு

தினமணி

‘பதினொரு  வயதில் இருந்து 35 வயதுக்குள் பெண்கள் பூப்படைதல், திருமணம், குழந்தைப்பேறு போன்ற வாழ்வின் முக்கியமான விஷயங்களை கடக்கிறார்கள். இந்தக் காலகட்டத்தில் கவனத்துடன் இருந்தால் எதிர்காலத்தில் பல பிரச்னைகளில் இருந்து தப்பிக்கலாம்’ ஆனால் இந்தியாவைப் பொருத்தவரையில் பெண்களை அதிகம் தாக்கும் பிரச்னை ரத்த சோகை. இந்த ரத்த சோகை உடலில் ஹீமோகுளோபின் குறைபாட்டால் வருகிறது. உலகில் உள்ள மக்கள் தொகையில் 25 சதவிகிதம் ரத்த சோகையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின்தான் ஆக்சிஜனை உடலின் எல்லா பகுதிக்கும் கொண்டு செல்கிறது. ஆக்சிஜன் கொண்டு செல்லும் திறன் பாதிக்கப்படும்போது, உடலுக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைக்க அதிக அளவில் இதயம் துடிக்க வேண்டியதாகிறது. இதனால் இதயம் பெரிதாவது, செயலிழப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். 

காரணம் - நம் உடலுக்கு தினமும்  10 முதல் 15 மில்லி கிராம் அளவுக்கு இரும்புச் சத்து தேவைப்படுகிறது. அதற்கும் குறைவான அளவில் இரும்புச் சத்து கிடைக்கும்போது ரத்தசோகை ஏற்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள் மற்றும் ஹீமோகுளோபின் அளவு குறைகிறது. இரும்புச் சத்து குறைபாடு, மரபுவழியாக ரத்தம் தொடர்பான நோய்கள், சிறுநீரகச் செயலிழப்பு, உயிர்ச் சத்து குறைபாடு போன்றவையும் ரத்த சோகை ஏற்படக் காரணங்களாக அமைகின்றன.

இவைத் தவிர கண்களைச் சுற்றி கருவளையும், அடிக்கடி ஜூரம்,  மூலம் சம்பந்தட்ட வியாதிகள், கல்லீரல் நோய்கள், அதிமகான உதிரப்போக்கு, காசநோய், புகையிலை பழக்கம் போன்ற பிரச்னைகளின் பக்கவிளைவாக ஒருவருக்கு ரத்த சோகை ஏற்படலாம். ரத்த சோகை வர பல காரணங்கள் இருந்தாலும் பெரும்பாலும் இரும்புச்சத்துக் குறைபாடே இதற்கு முக்கிய காரணமாய் இருக்கிறது.

ரத்த சோகையின் அறிகுறி - சோர்வு, உற்சாகம் இன்மை, உடல் மெலிவு. உடல் வெளுத்துப் போவது, மெலிவது, அடிக்கடி பெருமூச்சு ஏற்படுவது, மயக்கம் வருஅது, தலை சுற்றல், உணவில் நாட்டமின்மை, மாதவிடாய் சமயங்களில் அதிகமான உதிரப்போக்கு, சிலருக்கு அது அப்படியே நேர்மாறாக குறைவாக இருப்பது, மூச்சு வாங்குவது, உடல் சோர்வு இவையே பொதுவான காரணங்கள்.

உணவே நல்மருந்து
 
ஆட்டு இறைச்சி, அதன் எலும்பு, ஈரல், குடல் கோழி இறைச்சி, மீன், கீரை, மாதுளை, பேரீச்சம் பழம் போன்ற இரும்புச் சத்து அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் இரும்புச் சத்துக் குறைபாட்டைத் தவிர்க்கலாம். இதனுடன், வைட்டமின் சி உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். இரும்புச் சத்தை கிரகிக்க அது உதவும்.

அரைக்கீரை, சிறுகீரை, மணத்தக்காளி, கரிசலாங்கண்ணி, பொன்னாங்கண்ணி, வெந்தயக் கீரை, அகத்திக் கீரை முருங்கைக் கீரை போன்ற கீரை வகைகளை தொடர்ச்சியாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். பழங்களில் அத்திப் பழக், மாதுளை, உலர் திராட்சை, ஆரஞ்சு, ஆப்பிள், நெல்லிக்காய், சுண்டைக்காய் போன்றவை அடிக்கடி சாப்பிட வேண்டும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரணியலில் கோழி பண்ணையை அகற்றக் கோரி பாஜக ஆா்ப்பாட்டம்

செல்ஃபி கேர்ள்... ஜான்வி கபூர்!

ராணுவ முகாமில் இருந்து வெளியேறினார் நேபாள முன்னாள் பிரதமர்!

இந்த வார ஓடிடி படங்கள்!

நடிகர் ரோபோ சங்கர் காலமானார்!

SCROLL FOR NEXT