முகப்பு
இந்தியா

சமூக, அடித்தள மேம்பாடுக்கு முன்னுரிமை: அம்பிகா சோனி

குவாஹாட்டி,  ஜூலை 15:   சமூக மற்றும் அடித்தள கட்டமைப்பு மேம்பாடுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று மத்திய தகவல், ஒலிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனி தெரிவித்தார். ÷சம

Updated On : 27 டிசம்பர், 2023 at 4:43 PM
பகிர்:

குவாஹாட்டி,  ஜூலை 15:   சமூக மற்றும் அடித்தள கட்டமைப்பு மேம்பாடுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று மத்திய தகவல், ஒலிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனி தெரிவித்தார்.

÷சமூக மற்றும் அடித்தள கட்டமைப்பு பிரச்னைகள் குறித்து ஆராய்வதற்கான பத்திரிகை ஆசிரியர்களின் மாநாடு அசாம் மாநிலம் குவாஹாட்டியில் இரு நாள்கள் (ஜூலை 12, 13) நடைபெற்றது.

÷கல்வி, சுகாதாரம், சாலை வசதி, தொலைத் தொடர்பு இணைப்பு, மின்சார வசதி உள்ளிட்டவைகளே அடித்தள கட்டமைப்பாகும்.

÷இதில் அம்பிகா சோனி கூறியது: செய்தி, ஒலிபரப்புத்துறை வசம் தற்போது உள்ள 59 சேனல்களை, 200 சேனல்களாக படிப்படியாக உயர்த்த திட்டமிட்டுள்ளது. 3 பண்பலை அலைவரிசை விரைவில் தொடங்கப்படும். பத்திரிகைத் துறை 14 சதவீதத்திலிருந்து 19 சதவீதமாக வளர்ச்சி அடைந்துள்ளது. கணினி சார்ந்த அனிமேஷன் கேம்ஸ் துறைகளில் இந்தியா முக்கிய பங்கு ஆற்ற உள்ளது. ஆக்கப்பூர்வமான நவீன தகவல் தொடர்பு முறைகளை மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பது மிகவும் அவசியம் என்றார் அம்பிகா சோனி.

÷மத்திய சிறுபான்மையினர் நலம், கம்பெனிகள் விவகாரத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷீத்: சிறுபான்மையினரின் முன்னேற்றத்துக்கு முழுமையான வளர்ச்சி திட்டங்கள் தேவையானது. சராசரி இந்தியருடைய சேமிப்பு 37 சதவீதம் என கொண்டால் அதில் ஒரு சதவீதம்தான் பங்குச் சந்தை முதலீடாக உள்ளது. முதலீட்டாளர்களின் நலனுக்காகவும் பங்குச் சந்தை பற்றி மக்கள் தெரிந்து கொள்ள இணையதளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

÷அசாம் முதல்வர் தருண் கோகோய்: ஏழ்மை, வேலையின்மை மற்றும் கல்வியறிவின்மை ஆகிய பிரச்னைகளை ஒட்டு மொத்த சமூக கட்டமைப்பு வளர்ச்சியினால் மட்டுமே தீர்க்க முடியும். ஆகையால், பழங்குடியின மக்களுடைய வளர்ச்சிக்காக பல தன்னாட்சி வளர்ப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

÷மத்திய ஊரக மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் பிரதீப் ஜெயின்: கிராமப்புற மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்மூலம் 619 மாவட்டங்களுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. வேலையில்லாத சூழலில், சொந்த இடத்திலிருந்து வேறு இடத்துக்கு செல்வது இப்போது குறைந்துள்ளது.

÷ மலைப் பிரதேசங்கள், கிராமப்புறங்கள் மற்றும் பின் தங்கிய பகுதிகளில் உள்ள சாலைகளை இணைக்கும் திட்டம் சிறப்புற நடைபெறுகிறது. இதுவரை ரூ.64,559 கோடியில் 2 லட்சத்து 74 ஆயிரத்து 398 கிலோ மீட்டர் சாலைகள் போடப்பட்டுள்ளன.

÷சுற்றுலாத்துறை இணையமைச்சர் சுல்தான் அகமது: சுற்றுலாத் தலங்களில் பயணிகள் பயன் பெற குறைந்த கட்டணத்தில் உணவு மற்றும் தங்குமிட வசதியை ஏற்படுத்த மத்திய அரசு, மாநில அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளது. மாநில அரசுகள் முனைப்புடன் செயல்பட்டால்தான் இந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த முடியும்.

÷மனித ஆற்றல் மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் புரந்தேஸ்வரி: படிப்பறிவில்லாத 7 கோடி மக்களுக்கு சாக்ஷார் பாரத் திட்டத்தில் கல்வி அளிப்பதன் மூலம் இந்தியா 80 சதவீத கல்வியறிவு பெற்ற நாடாக மாறும். இப்போது உயர்கல்வி மேற்கொள்வோரின் எண்ணிக்கை 12.4 சதவீதமாக உள்ளது. இதை 2020-ல் 30 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி அளிக்கும் திட்டத்தை மாநில அரசுகள் முனைப்புடன் செயல்படுத்த வேண்டும். இப்போது 500 பல்கலைக்கழகங்கள், 22 ஆயிரம் கல்வி நிறுவனங்கள், 60 லட்சம் கல்வியாளர்கள் உள்ளனர். மதிய உணவு திட்டத்தில் 13 கோடி மாணவர்கள் பயன் பெறுகின்றனர் என்றார்.

÷பத்திரிகைத் தகவல் துறை முதன்மை டைரக்டர் ஜெனரல் நீலம் கபூர் வரவேற்றார்.

செய்தி, ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் சி.எம். ஜதுவா, தோட்டக்கலைத் துறை ஆணையர் கோரக் சிங், பத்திரிகை தகவல்துறை இயக்குநர் மம்தா வர்மா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →