உணவு பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்ற நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர்?
உணவு பாதுகாப்பு மசோதாவை இன்னும் 10 அல்லது 15 நாள்களில் நிறைவேற்றுவதற்கான பணிகளை மத்திய அரசு முடுக்கி விட்டுள்ளது என மத்திய உணவு அமைச்சர் கே.வி. தாமஸ் தெரிவித்துள்ளார்.
உணவு பாதுகாப்பு மசோதாவை இன்னும் 10 அல்லது 15 நாள்களில் நிறைவேற்றுவதற்கான பணிகளை மத்திய அரசு முடுக்கி விட்டுள்ளது என மத்திய உணவு அமைச்சர் கே.வி. தாமஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை தாமஸ் கூறியதாவது: உணவு பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்ற மூன்று வழிமுறைகளை கடைப்பிடிக்கலாம். ஒன்று அவசரச் சட்டம் பிறப்பிப்பது, அல்லது நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்டுவது, இல்லையென்றால் அரசாணை பிறப்பித்து மசோதாவின் சில அம்சங்களை நிறைவேற்றுவது உள்ளிட்டவை ஆகும்.இதுதொடர்பாக இன்னும் 10 அல்லது 15 நாள்களில் மத்திய அரசு இறுதி முடிவெடுக்கும் என்றார்.
கடந்த 2011-ம் ஆண்டு டிசம்பர் மாதம் உணவு பாதுகாப்பு மசோதா முதன்முறையாக மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்டத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் நிலம் கையகப்படுத்துதல் மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டது. ஆனால் முறைகேடு புகார்கள் தொடர்பாக அமைச்சர்கள் பவன்குமார் பன்சால், அஸ்வனி குமார் பதவி விலகினால் தான் அம்மசோதாக்களை நிறைவேற்ற அனுமதிப்போம் என எதிர்க்கட்சிகள் கூறின. இதனால் அம்மசோதாக்கள் நிறைவேற்றப்படவில்லை.
Advertisement
Advertisement