சித்தராமையா இன்று பதவியேற்பு
கர்நாடகத்தின் 28-ஆவது முதல்வராக சித்தராமையா திங்கள்கிழமை பதவியேற்கவிருக்கிறார். இதையொட்டி, பெங்களூர் மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
கர்நாடகத்தின் 28-ஆவது முதல்வராக சித்தராமையா திங்கள்கிழமை பதவியேற்கவிருக்கிறார். இதையொட்டி, பெங்களூர் மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
பெங்களூர் கஸ்தூர்பா சாலையில் அமைந்துள்ள கண்டீரவா விளையாட்டுத் திடலில் முற்பகல் 11.50 மணிக்கு தொடங்கும் பிரம்மாண்டமான விழாவில் கர்நாடகத்தின் 28-ஆவது முதல்வராக சித்தராமையா பதவியேற்றுக் கொள்கிறார்.
ஆளுநர் எச்.ஆர்.பரத்வாஜ் அவருக்கு பதவி பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். சித்தராமையாவுடன் வேறு எந்த அமைச்சர்களும் பதவியேற்கவில்லை.
Advertisement
Advertisement
விழாக்கோலம்: பதவியேற்பு விழாவையொட்டி பெங்களூரில் அமைந்திருக்கும் விதானசெüதா உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் அனைத்தும் ஒளி விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
கண்டீரவா விளையாட்டுத் திடல் வண்ணக்கோலம் பூண்டுள்ளது. வண்ணப்பூக்கள், வண்ண விளக்குகளால் கண்டீரவா விளையாட்டுத் திடல் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பதவியேற்பு விழாவில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் விளையாட்டுத் திடலைச் சுற்றிப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.