முகப்பு
இந்தியா

ஜெர்மன் பேக்கரி மீண்டும் தொடக்கம்

குண்டுவெடிப்பு நிகழ்ந்த புணே ஜெர்மன் பேக்கரி மீண்டும் செயல்படத் தொடங்கி உள்ளது. மகாராஷ்டிர மாநிலம் புணே நகரில் உள்ள கோரேகான் பூங்காவில் இயங்கி வந்த ஜெர்மன் பேக்கரியில் கடந்த 2010-ம் ஆண்டு நிகழ்ந்த பயங்கரவாத வெடிகுண்டு தாக்குதலில் 17 பேர் உயிரிழந்தனர். 60 பேர் காயமடைந்தனர்.

Updated On : 13 மே 2013, 3:17 am IST
பகிர்:

குண்டுவெடிப்பு நிகழ்ந்த புணே ஜெர்மன் பேக்கரி மீண்டும் செயல்படத் தொடங்கி உள்ளது. மகாராஷ்டிர மாநிலம் புணே நகரில் உள்ள கோரேகான் பூங்காவில் இயங்கி வந்த ஜெர்மன் பேக்கரியில் கடந்த 2010-ம் ஆண்டு நிகழ்ந்த பயங்கரவாத வெடிகுண்டு தாக்குதலில் 17 பேர் உயிரிழந்தனர். 60 பேர் காயமடைந்தனர்.

குண்டுவெடிப்பால் ஜெர்மன் பேக்கரி முற்றிலும் சேதமடைந்தது. இந்நிலையில் புதிய நிர்வாகத்தின் கீழ் ரூ.5 கோடி செலவில் ஜெர்மன் பேக்கரி சீரமைக்கப்பட்டது. சனிக்கிழமை மாலை முதல் ஜெர்மன் பேக்கரி திறக்கப்பட்டது.

குண்டுவெடிப்பால் சேதமடைந்த கட்டடப் பகுதிகள் அனைத்தும் அகற்றப்பட்டு விட்டன. தற்போது பாதுகாப்பைக் கருதி மெட்டல் டிடெக்டர், கண்காணிப்பு கேமராக்கள், பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என உரிமையாளர் விஜய் செவாலே தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.