முகப்பு
இந்தியா

சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க ஜெகன் மோகன் ரெட்டி மறுப்பு

 ஆந்திரபிரதேசத்தின்(சீமாந்திரா) முதல்வராக தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு நாளை பதவியேற்கிறார். இதற்காக விஜயவாடா, குண்டூர் இடையே

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:32 AM
பகிர்:

 ஆந்திரபிரதேசத்தின்(சீமாந்திரா) முதல்வராக தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு நாளை பதவியேற்கிறார். இதற்காக விஜயவாடா, குண்டூர் இடையே உள்ள நாகர்ஜூனா நகரில் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. காலை 7.30 மணிக்கு பதவியேற்கும் சந்திரபாபு நாயுடுவிற்கு ஆளுநர் இ.எஸ்.எல். நரசிம்மன் பதவி பிரமாணம் செய்துவைக்கிறார்.

இந்த விழாவிற்கு லட்சக்கணக்கான தொண்டர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விழாவிற்கு வருமாறு பல்வேறு முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. எதிர்கட்சியாக உயர்ந்துள்ள ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கும், அதன் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டிக்கும் அழைப்பிதழ் அனுப்பபட்டுள்ளது.

இந்நிலையில் இந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதறகு அவர் மறுத்துவிட்டார்.

ராஜமுந்திரியில் கட்சி நிர்வாகிகளிடம் தேர்தல் தோல்வி குறித்து ஆலாசனை நடத்திவிட்டு வந்த ஜெகனிடம் இது பற்றி கேட்ட போது,

"புதிய தலைநகரை உருவாக்குவதற்கு மக்களிடம் நன்கொடையை எதிர்பார்க்கும் சந்திரபாபு நாயுடு, பதவியேற்பு விழாவிற்காக 30 கோடி செலவிட்டுள்ளார், இதற்காக இவ்வளவு செய்வது வீண் என்பது எனது தனிப்பட்ட கருத்து" என்றார்.

இந்நிலையில் பதவியேற்பு விழாவில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், வெங்கய்ய நாயுடு, நிர்மலா சீத்தாராமன், உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →