முகப்பு
இந்தியா

தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் பாஜகவில் இணைந்தனர்

நாகலாந்து மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள் பாஜகவில் இணைந்தனர்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:37 AM
பகிர்:

நாகலாந்து மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள் பாஜகவில் இணைந்தனர்.

அம்மாநில தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் இம்டிலிம்பா சங்டம் நேற்று செய்தியாளர்களை சந்தித்த்ர். அப்போது தேசிய வாதகாங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேருவதாக அறிவித்தார். அவருடன் சேர்ந்து முன்னாள் மாநில உள்துறை அமைச்சர் டிஎம் லோதா மோகன்லுமா கிகோன் உள்ளிட்ட  3 எம்.எல்.ஏ.க்கள் பாஜகவில் இணைந்துள்ளனர். 

இதுகுறித்து அவர்கள் கூறுகையில் பாஜக மத்தியில் ஆட்சியமைத்துள்ளது. அவர்களுடன் இணைந்து நாகலாந்தின் வளர்ச்சிக்கு பாடுபடப்போவதாக கூறியுள்ளனர். நாகலந்து சட்டசபையில் மொத்தம் உள்ள 60 இடங்களில் நாகலந்தில் ஆட்சி செய்யும் டான்(dan)  கட்சிக்கு 51 எம்.எல்.ஏ.க்களும், காங்கிரஸ் கட்சிக்கு 8 எம்.எல்.ஏக்களும், தேசிய வாத காங்கிரஸ் கட்சிக்கு 4 எம்.எல்.ஏ.க்களும் இருந்தனர். தற்போது 3 பேர் பாஜகவில் இணைந்துவிட்டதால் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பலம் ஒன்றாக குறைந்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →