பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானியின் மனைவி உடல் நலக் குறைவு காரணமாக தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அத்வானியின் மனைவி கமலா அத்வானி (80) மூச்சுத் திணறல் காரணமாக பாதிக்கப்பட்டதாகவும், இன்று காலை 5.30 மணியளவில் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அத்வானியின் மனைவி இன்று காலை எங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.