தில்லி மாசு: ஒற்றை-இரட்டை திட்டம் இரு கார்களை வாங்க வழிவகுக்கும்!
தில்லி அரசு அறிமுகப்படுத்தவுள்ள ஒற்றை-இரட்டை எண் கார்கள் திட்டம், மக்களை இரு கார்களை வாங்குவதற்கு ஊக்குவிக்கும் என
மாசு அதிகமாகவதை தடுக்கும் வகையில் தில்லி அரசு அறிமுகப்படுத்தவுள்ள ஒற்றை-இரட்டை எண் வாகனங்கள் இயக்க திட்டம், இரு கார்களை வாங்குவதற்கு ஊக்குவிக்கும் என மத்திய தேசிய பசுமை தீர்ப்பாயம் கூறியுள்ளது.
அளவுக்கு அதிகமான மாசு ஏற்படுவதை தடுக்கும் வகையில் வரும் ஜனவரி ஒன்றாம் தேதி முதல், தில்லி நகரில் இயக்கப்படும் தனியார் வாகனங்களில் ஒற்றை எண் வரிசை கொண்ட வாகனங்கள் ஒற்றை எண் தேதிகளிலும், இரட்டை எண் வரிசை வாகனங்கள் இரட்டை எண் தேதிகளிலும் மட்டுமே காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இயக்கப்பட வேண்டும் என தில்லியை ஆளும் ஆம் ஆத்மி அரசு அறிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் இத்திட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் உள்ள குறைவாடுகள் குறித்து தில்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் முறையிடப்பட்டது.
Advertisement
இதைவிசாரித்த நடுவர் சுவதந்திரக் குமார் தலைமையிலான அமர்வு, இரட்டை-ஒற்றை எண் வாகனங்கள் இயக்கம் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
முதலில் இத்திட்டம் தில்லி மக்களை இரு கார்களை வாங்க ஊக்குவிக்கும் என்றார் நீதிபதி குமார்.
மேலும், இரட்டை-ஒற்றை எண் வாகனங்கள் இயக்க திட்டம் அமல்படுத்தும்போது, தில்லி அரசு இயற்கைவாயு எரிபொருளால் இயங்கும் 6000 புதிய பேருந்துகளை இயக்கும் என அறிவித்துள்ளது. இயற்கைவாயு வாகனங்களால் மாசு ஏற்படாது என்று உறுதியாக கூற முடியுமா என்றும் கேள்வி எழுப்பப்பட்டது. மேலும், 10 கார்கள் நிற்கும் இடத்தை ஒரு பேருந்து ஆக்கிரமித்து கொள்ளும் என்றார் நடுவர்.
மேலும், இத்திட்டத்திலிருந்து சிலருக்கு விலக்கு அளிக்கவுள்ளதாக தகவல்கள் வருகின்றனர். திட்டம் குறித்த முழுமையான தகவல்கள் இல்லை.
இத்திட்டம் நல்லதுதான். ஆனால், இதுதவிர தில்லி நகர் மாசுபடுவதை குறைப்பதற்கு வேறு என்ன முயற்சிகள் எடுக்கப்படுகின்றன என நடுவர் மன்றம் வினா எழுப்பியது.
தில்லியில் மெட்ரோ சேவை அறிமுகப்படுத்தப்பட்ட போது வாகன நெரிசல் குறையும் என கூறப்பட்டது. ஆனால், இன்றும் சாலைகளில் வாகன நெருக்கடி குறைந்ததாக தெரியவில்லை.
மேலும், தில்லி போக்குவரத்து நிறுவனம் பல நேரங்களில் காலியான பேருந்துகளை இயக்குகிறது. இதனால் மாசு அதிகமாவதோடு இயற்கை வளங்களும் வீணாகிறது. இதுகுறித்து விசாரணை அறிக்கையை சமர்பிக்குமாறு கேட்டுக் கொண்டும், இதுவரை எந்த அறிக்கையைும் தாக்கல் செய்யவில்லை என்றார் நீதிபதி.