முகப்பு
இந்தியா

ரூபாய் நோட்டுகளில் எழுதியிருந்தால் செல்லாது: வதந்தி என ரிசர்வ் வங்கி விளக்கம்

இந்திய ரூபாய் நோட்டுகளில் உள்ள வெள்ளைப் பகுதியில் ஏதாவது எழதப்பட்டிருந்தால் அவை செல்லாது சமூக வலைதளங்களில் பரவும் தகவல் உண்மையல்ல

Updated On : 14 டிசம்பர், 2015 at 10:00 PM
பகிர்:

இந்திய ரூபாய் நோட்டுகளில் உள்ள வெள்ளைப் பகுதியில் ஏதாவது எழதப்பட்டிருந்தால் அவை செல்லாது சமூக வலைதளங்களில் பரவும் தகவல் உண்மையல்ல என ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.

இந்திய ரூபாய் நோட்டுகளில் ஏதாவது கிறுக்கப்பட்டிருந்தால் அவை வரும் ஜனவரி முதல் செல்லாது என்ற தகவல் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜன், அந்த தகவல் உண்மையில்லை. ரூபாய் நோட்டுகளில் எழுதியிருந்தாலும் அவை பண பரிமாற்றத்துக்கு ஏற்றுக் கொள்ளப்படும். மக்கள் எவ்வித அச்சமின்றி பண பரிமாற்றத்தில் ஈடுபடலாம் என்றார்.

Advertisement

மேலும், இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி எவ்வித அறிவிக்கையும் வெளியிடவில்லை என ஆடியோ வடிவில் வெளியிட்டுள்ள தகவலில் ரகுராம் ராஜன் குறிப்பிட்டுள்ளார்.

அதே நேரத்தில், ரூபாய் நோட்டுகளில் எழுதுவதை பொதுமக்கள் தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனால், நோட்டுகளின் ஆயுள் குறைந்துவிடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.