முகப்பு
இந்தியா

புதிதாக யாருக்கும் சிறுபான்மை அந்தஸ்து வழங்கப்படாது: மத்திய அரசு

தற்போதைய நிலையில் எந்த சமுதாயத்துக்கும் புதிதாக சிறுபான்மை அந்தஸ்து வழங்கப்பட மாட்டாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.

Updated On : 23 டிசம்பர், 2015 at 3:52 PM
பகிர்:

தற்போதைய நிலையில் எந்த சமுதாயத்துக்கும் புதிதாக சிறுபான்மை அந்தஸ்து வழங்கப்பட மாட்டாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை இஸ்லாமியர், சீக்கியர், புத்த மதத்தினர், கிறிஸ்தவர்கள், பார்சி மற்றும் ஜெயின் இனத்தவர்களுக்கு மட்டுமே 1992 ஆம் ஆண்டைய தேசிய சிறுபான்மையினர் சட்டத்தின் கீழ் சிறுபான்மை அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வேறு சமுதாயத்துக்கு புதிதாக சிறுபான்மை அந்தஸ்து வழங்கப்படுமா என மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்து மூலம் பதிலளித்த மத்திய சிறுபான்மைத் துறை அமைச்சர் முக்தர் அபாஸ் நக்வி, தற்போதைய நிலையில் யாருக்கும் புதிதாக சிறுபான்மை அந்தஸ்து வழங்கப்படாது என்றார்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.