ஜல்லிகட்டு: புத்தாண்டில் நல்ல செய்தி - அமைச்சர் ஜவடேகர்
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிகட்டை மீண்டும் நடத்துவது குறித்த நல்ல செய்தி புத்தாண்டு அன்று அறிவிக்கப்படும் என
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிகட்டை மீண்டும் நடத்துவதற்கான வழிமுறைகளை அரசு ஆய்ந்து வருகிறது. புத்தாண்டு அன்று நல்ல செய்தி அறிவிக்கப்படும் என மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.
தில்லியில் செய்தியாளர்களிடம் அமைச்சர் பேசியதாவது:
விலங்குகளை சித்ரவதைக்கு உள்ளாக்காமல் பராம்பரிய வழக்கங்களை தொடர்வதற்கு அரசு அனுமதி அளிக்கும்.
Advertisement
தமிழகத்தின் ஜல்லிகட்டு, மகாராஷ்டிரவின் மாட்டுவண்டி பந்தயம், கர்நாடகாவின் கம்பாலா மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் சில இடங்களில் நடைபெறும் மாட்டுவண்டி போட்டிகள் பல நூற்றாண்டுகளாக பாரம்பரிய, கலாச்சார முறையில் பின்பற்றப்பட்டு வருகின்றன. இத்தகைய கலாச்சாரங்களை மத்திய அரசு மதிக்கிறது. அதே நேரத்தில் விலங்குகளை வதைக்கக் கூடாது.
பாரம்பரிய வழக்கங்களை தொடருவதற்கு தேவையான வழிவகைகளை அரசு ஆய்ந்து வருகிறது. இதுகுறித்து நல்ல செய்தி வரும் புத்தாண்டு தினத்தன்று அறிவிக்கப்படும்
விலங்குகளை கொண்டு நடத்தப்படும் இத்தகைய விழாக்களை தொடர்ந்து நடத்துவதற்கு 'சில காலம்' அனுமதி அளிக்கப்படும் என்றார்.
ஜல்லிகட்டு உள்ளிட்ட விலங்குகளை கொண்டு நடத்தப்படும் விழாக்களை தொடர்ந்து நடத்துவதற்கான 'நிர்வாக ஆணை' வருகிற ஜனவரி 1 ஆம் தேதி பிறப்பிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அரசின் தலைமை சட்ட ஆலோசகர் முகுல் ரோத்தகியிடம் ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது.