பாரமுல்லா சாலையில் அனாதையாகக் கிடந்த காரால் பதற்றம்
ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா நகரின் சாலையில் அனாதையாகக் கிடந்த காரால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா நகரின் சாலையில் அனாதையாகக் கிடந்த காரால் பதற்றம் ஏற்பட்டள்ளது.
கன்சிபோரா - ஜோஹம்மா சாலையின் ஓரத்தில் சிவப்பு நிற மாருதி கார் ஒன்று இன்று காலை முதல் நிறுத்தப்பட்டிருந்தது.
இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்து காவல்துறைக்கு புகார் அளித்ததன் பேரில், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் விரைந்து வந்து காரை திறந்து சோதனை செய்தனர்.
Advertisement
அதில், 5 லிட்டர் யூரியா, மண், சிறிய வொயர்கள் கண்டெடுக்கப்பட்டன. எனினும், இதில் எந்த வெடிகுண்டு தயாரிப்புக்கான பொருட்களும் இல்லை என்றும், கைப்பற்றப்பட்ட பொருட்களைக் கொண்டு விசாரணை நடத்தப்படுவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.