முகப்பு
இந்தியா

முக்கிய உல்ஃபா தலைவர் அனுப் செட்டீயா ஒப்படைப்பு: வங்க தேசத்துக்கு இந்தியா நன்றி

கடந்த 20 ஆண்டுகளாக வங்கதேசத்தில் இருந்த முக்கிய உல்ஃபா தலைவர் அனுப் செட்டீயா இன்று இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.

Updated On : 11 நவம்பர், 2015 at 4:10 PM
பகிர்:

கடந்த 20 ஆண்டுகளாக வங்கதேசத்தில் இருந்த முக்கிய உல்ஃபா தலைவர் அனுப் செட்டீயா இன்று இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் இயங்கி வரும் தடைசெய்யப்பட்ட உல்ஃபா இயக்கத்தின் ஆரம்பகால பொதுச் செயலராக இருந்தவர்  செட்டீயா (48). இவரது இயற்பெயர் கோலப் பரூரா.

இந்தியாவில் கொலை, கடத்தல், வங்கிக் கொள்ளைகளில் ஈடுபட்ட செட்டீயா கடந்த 20 ஆண்டுகளாக வங்க தேசத்தில் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்தார்.

Advertisement

அவரை கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் மத்திய அரசு வலியுறுத்தி வந்த நிலையில் இன்று செட்டீயா இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.

பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசனையின் பேரில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் எடுத்த நடவடிக்கையயால் இது சாத்தியமாகியுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான சக்திகளுக்கு வங்கதேசத்தில் இடமில்லை என்ற தற்போதைய ஆட்சியாளர் ஷேக் ஹசினாவின் தீர்மானத்தின்படி செட்டீயா இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

வங்கதேசத்தின் இந்த நடவடிக்கையை பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் வரவேற்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.