முகப்பு
இந்தியா

பருப்பு உற்பத்தியை அதிகரிக்க அனைத்து மாநில விவசாய அமைச்சர்கள் கூட்டம்: மத்திய அரசு முடிவு

பருப்பு வகைகளின் உற்பத்தியை பெருக்குவதற்காக அனைத்து மாநில விவசாய துறை அமைச்சர்களுடன் மத்திய அரசு விரைவில் ஆலோசனை நடத்தவிருக்கிறது.

Updated On : 19 நவம்பர், 2015 at 2:31 PM
பகிர்:

பருப்பு வகைகளின் உற்பத்தியை பெருக்குவதற்காக அனைத்து மாநில விவசாய துறை அமைச்சர்களுடன் மத்திய அரசு விரைவில் ஆலோசனை நடத்தவிருக்கிறது.

உலகில் உள்ள நாடுகளில் 30 சத நாடுகள் மட்டுமே பருப்பு உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. பிற நாடுகள் அனைத்தும் நுகர்வோராகவே உள்ளன.  கடந்த 6 ஆண்டுகளாக ஏற்பட்ட இயற்கை பேரழிவுகள் மற்றும் இன்ன பிற காரணங்களால் பருப்பு வகைகளின் உற்பத்தி வெகுவாக குறைந்தது.

உற்பத்திக்கும் தேவைக்குமான இடைவெளி அதிகரித்ததால், பருப்பு வகைகளின் விலை வெகுவாக உயர்ந்தது.

Advertisement

எனவே, வருங்காலங்களில் துவரம் பருப்பு மற்றும் பிற எண்ணெய் விதைகளின் உற்பத்தி வெகுவாக குறையும் என மஹாராஷ்டிர விவசாய துறை அமைச்சர்  ஏக்நாத் கத்சே கூறினார்.

எனவே, பருப்பு உற்பத்தியை பெருக்குவதற்காக அனைத்து மாநிலங்களில் உள்ள விவசாய துறை அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டத்தை நடத்துவதற்கு பிரமதர் நரேந்திர மோடி அறிவறுத்தியுள்ளார்.

இதன்படி மத்திய விவசாய துறை அமைச்சர் ராதா மோகன் தலையில் வருகிற 23, 24 தேதிகளில் சிறப்பு கூட்டம் நடைபெறவிருக்கிறது.

இக்கூட்டத்தில் பருப்பு உற்பத்தியை அதிகரிப்பதற்குரிய நீண்டகால உத்திகள் வகுப்படும் என தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.