முகப்பு
இந்தியா

ஷீனா போரா கொலை: இந்திராணி மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கை தாக்கல்

ஷீனா போரா கொலை வழக்கு தொடர்பாக இந்திராணி முகர்ஜி உள்ளிட்ட மூவர் மீது மும்பை நீதிமன்றத்தில் சி.பி.ஐ. இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.

Updated On : 19 நவம்பர், 2015 at 7:27 PM
பகிர்:

ஷீனா போரா கொலை வழக்கு தொடர்பாக இந்திராணி முகர்ஜி உள்ளிட்ட மூவர் மீது மும்பை நீதிமன்றத்தில் சி.பி.ஐ. இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.

ஷீனா போராவை கொலை செய்ததாக அவரது தாயார் இந்திராணி முகர்ஜி, முன்னாள் கணவர் சஞ்சய் கன்னா, டிரைவர் ஷியாம் ராய் ஆகியோர் கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளனர்.

கார் டிரைவரான ஷியாம் ராயிடம் மும்பை போலீஸார் வேறு ஒரு வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தியபோது, அவர் ஷீனா போராவை கொலை குறித்த தகவல்களை தெரிவித்தார்.

Advertisement

இதையடுத்து போலீஸார் விசாரணை நடத்தி இந்திராணி, அவரது முன்னாள் கணவர்  சஞ்சய் கன்னா ஆகியோரை கைது செய்தனர்.

மஹாராஷ்டிரா அரசு இந்த வழக்கை பின்னர் மத்திய புலனாய்வு துறைக்கு (சி.பி.ஐ.) மாற்றியது. எனினும், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கை மும்பை காவல் துறை ஆணையர் ராகேஷ் மரியா கண்காணித்து வந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான 1000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை சி.பி.ஐ போலீஸார் மும்பை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அதில் இந்திராணி முகர்ஜி, சஞ்சய் கன்னா, ஷியாம் ராய் ஆகியோர் குற்றவாளிகள் என குறிப்பிடப்பட்டிருந்தது.

குற்றப்பத்திரிக்கையில் 150 பேரின் வாக்குமூலங்களும், 200 ஆவணங்களும் இணைக்கப்பட்டிருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.