முகப்பு
இந்தியா

ஷீனா போரா கொலை வழக்கு: பீட்டர் முகர்ஜியின் மகன் ராகுலிடம் சிபிஐ விசாரணை

ஷீனா போரா கொலை வழக்கில் திடீர் திருப்பமாக தொழில் அதிபர் பீட்டர் முகர்ஜி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது மகன் ராகுல் முகர்ஜியிடம் சிபிஐ அதிகாரிகள் 12 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On : 20 நவம்பர், 2015 at 12:31 PM
பகிர்:

ஷீனா போரா கொலை வழக்கில் திடீர் திருப்பமாக தொழில் அதிபர் பீட்டர் முகர்ஜி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது மகன் ராகுல் முகர்ஜியிடம் சிபிஐ அதிகாரிகள் 12 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஷீனா போராவுக்கும், ராகுல் முகர்ஜிக்கும் இடையே காதல் இருந்ததாகவும், இருவரும் சகோதர உறவு முறை என்பதால்தான் ஷீனாவை இந்திராணி முகர்ஜி கொலை செய்ததாகவும் வழக்கின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

நேற்று இரவு முதல் ராகுலிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில், இன்று காலை 10.30 மணியளவில் தான் ராகுல் சிபிஐ அலுவலகத்தில் இருந்து வெளியே வந்துள்ளார்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.