முகப்பு
இந்தியா

உரிய நேரத்தில் ஆம்புலன்ஸ் அனுப்பாததால் மருத்துவரைச் சரமாரியாக தாக்கிய மர்ம நபர்கள்

உத்தர பிரதேச மாநிலம் சிதாபூர் பகுதியில், விபத்தில் சிக்கியவரை மீட்க ஆம்புலன்ஸ் சரியான நேரத்திற்கு வராததைக் கண்டித்து, அம்மருத்துவனையின் மருத்துவர்...

Updated On : 21 செப்டம்பர், 2015 at 12:48 PM
பகிர்:

உத்தர பிரதேச மாநிலம் சிதாபூர் பகுதியில், விபத்தில் சிக்கியவரை மீட்க ஆம்புலன்ஸ் சரியான நேரத்திற்கு வராததைக் கண்டித்து, அம்மருத்துவனையின் மருத்துவர் மீது, மர்ம நபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவமனை மருத்துவர் கூறியதாவது:

அவசர சிகிச்சை பிரிவில் நோயாளிக்குச் சிகிச்சை நடத்திக் கொண்டிருக்கும் போது மர்ம நபர்கள் சிலர் சரமாரியாகத் தாக்குதல் நடத்தினர்.

Advertisement

விபத்தில் சிக்கியவரை மீட்க ஆம்புலன்ஸ் அனுப்பாததைக் கண்டித்து நோயாளியின் உறவினர்கள் கடும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதுதொடர்பான வீடியோ, தற்போது வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மருத்துவமனையை முற்றுகையிட்டு மருத்துவர் மற்றும் செவிலியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.