முகப்பு
இந்தியா

கவனித்தீர்களா... தருண் கோகோய் சிரிப்பதையே நிறுத்திவிட்டார்: மோடி ருசிகரப் பேச்சு

அஸ்ஸாம் மாநிலத்தில் முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்ததும், முதல்வர் தருண் கோகோய் சிரிப்பதையே நிறுத்திவிட்டார் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

Updated On : 8 ஏப்ரல், 2016 at 3:46 PM
பகிர்:

ரஹா : அஸ்ஸாம் மாநிலத்தில் முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்ததும், முதல்வர் தருண் கோகோய் சிரிப்பதையே நிறுத்திவிட்டார் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

அஸ்ஸாம் மாநிலத்தில் அமைந்துள்ள காமாக்யா கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்திய பிரதமர் மோடி, நகோன் பகுதியில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றார்.

அப்போது பேசிய அவர், அஸ்ஸாமில் நடந்து முடிந்த வாக்குப்பதிவில், அதிக அளவிலான மக்கள் வாக்களித்துள்ளனர். நீங்கள் நிச்சயம் கவனித்திருக்கலாம், முதல் கட்ட வாக்குப்பதிவுக்குப் பிறகு முதல்வர் தருண் கோகோய் சிரிப்பதையே நிறுத்திவிட்டார். தற்போது, தன்னை காப்பாற்றுமாறு தில்லியில் இருந்து காங்கிரஸ் கட்சித் தலைவர்களை அழைத்துக் கொண்டிருக்கிறார்.

Advertisement

ஆனால், அவர்களால் தில்லியையேக் காப்பாற்ற முடியாத நிலையில், எப்படி கோகோயைக் காப்பாற்றப் போகிறார்கள் என்ற மோடி பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.