முகப்பு
இந்தியா

பாஜக முகத்தில் விழுந்த அடி: உத்தரகண்ட் விவகாரம் குறித்து காங்கிரஸ்

உத்தரகண்ட் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டதை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது பாஜக முகத்தில் விழுந்த அடி என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

Updated On : 21 ஏப்ரல், 2016 at 6:29 PM
பகிர்:

புது தில்லி: உத்தரகண்ட் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டதை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது பாஜக முகத்தில் விழுந்த அடி என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

ஜனநாயகத்தை காலில்போட்டு மிதித்தற்கும், இந்திய அரசியல் சாசனத்தை கொலை செய்ததற்கும் பாஜக மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜ்வாலா கூறியுள்ளார்.

இது உத்தரகண்ட் மக்களுக்கு கிடைத்த வெற்றி. ஜனநயாக அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கலைப்பதற்கு முயற்சித்த பாஜகவின் முகத்தில் விழுந்த அடி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

அருணாசல பிரதேசத்தைப் போன்று உத்தரகண்ட் மாநிலத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் ஆட்சியை கவிழ்ப்பதற்கு பாஜக மேற்கொண்ட முயற்சிக்கு முடிவுகட்டப்பட்டுள்ளது. இதற்காக பிரதமர் மோடியும், காங்கிரஸ் தலைவர் அமித் ஷாவும் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

உத்தரகண்ட் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டதை எதிர்த்து அம்மாநிலத்தின் முதல்வராக இருந்த ஹரீஷ் ராவத் தொடர்ந்த மனுவை விசாரித்த உத்தரகண்ட் உயர் நீதிமன்றம் இன்று அந்த உத்தரவை ரத்து செய்தது.

உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலுக்கு மாறாக உத்தரகண்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டிருப்பதாக உயர் நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

மேலும், ஏப்ரல் 29ம் தேதி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவும் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.