முகப்பு
இந்தியா

மேற்கு வங்கத்தில் 3ம் கட்டத் தேர்தல்: 2 மணி நேரத்தில் 18% வாக்குப்பதிவு

மேற்கு வங்க மாநிலத்தில் இன்று நடைபெற்று வரும் 3ம் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு துவங்கி 2 மணி நேரத்தில் 18% வாக்குகள் பதிவாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 21 ஏப்ரல், 2016 at 1:09 PM
பகிர்:

கொல்கத்தா :  மேற்கு வங்க மாநிலத்தில் இன்று நடைபெற்று வரும் 3ம் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு துவங்கி 2 மணி நேரத்தில் 18% வாக்குகள் பதிவாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் 3ம் கட்டமாக 62 தொகுதிகளில் இன்று காலை துவங்கி வாக்குப்பதிவு நடந்து வருகிறது.

முர்ஷிதாபாத் மாவட்டத்தில் அதிகபட்சமாக 2 மணி நேரத்தில் 20.53 வாக்குப்பதிவு பதிவாகியிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

Advertisement

பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடந்து வருகிறது. பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் ஆண்களும், பெண்களும் நின்று வாக்களித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.