நாடாளுமன்றத்தில் உத்தரகாண்ட் விவகாரம்: அவை நடவடிக்கைகள் முடங்கின
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு இன்று காலை துவங்கியது. இதையடுத்து, உத்தரகாண்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டதைக் கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டது.
புது தில்லி : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு இன்று காலை துவங்கியது. இதையடுத்து, உத்தரகாண்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டதைக் கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டது.
மக்களவையில் இன்று உத்தரகாண்ட் விவகாரம் குறித்துப் பேசிய கார்கே, 'இது ஜனநாயகப் படுகொலை' என்று கூறினார். தொடர்ந்து பல்வேறு கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர்.
மக்களவையில் கடும் அமளி நிலவியதால், அவைத் தலைவர் சுமித்ரா மகாஜன், அவையை ஒத்திவைத்தார்.
Advertisement
மாநிலங்களவையிலும், உத்தரகாண்ட் விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சிகள் கோஷமிட்டதால், அவை நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டது.