இந்தியா

மோடி என்ன படித்தார்? விவரங்களை கேஜரிவாலிடம் வழங்க தகவல் ஆணையம் உத்தரவு

பிரதமர் மோடியின் கல்வித் தகுதி குறித்த விவரங்களை தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு வழங்குமாறு தில்லி மற்றும் குஜராத் பல்கலைக்கழகங்களுக்கு மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

PTI

புது தில்லி: பிரதமர் மோடியின் கல்வித் தகுதி குறித்த விவரங்களை, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு வழங்குமாறு தில்லி மற்றும் குஜராத் பல்கலைக்கழகங்களுக்கு மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு குறித்த விவரம்:

ஹன்ஸ் ராஜ் ஜெயின் என்பவர் கடந்த 1978 ஆம் ஆண்டில் தில்லி பல்கலைக்கழகத்தில் பயின்று பட்டம் பெற்ற என் (நரேந்திர) மற்றும் எம் (மோடி) எழுத்துகளில் தொடங்கும் மாணவர்களின் விவரங்களையும், குஜராத் பல்கலைக்கழகத்தில் 1983 ஆம் ஆண்டு பயின்ற மாணவர்கள் குறித்த விவரங்களையும் கேட்டார்.

இரு பல்கலைக்கழகங்களும் தகவல்களை தேடுவதற்கு உதவியாக குறிப்பிட்ட மாணவரின் 'ரோல் நம்பர்' இருந்தால் மட்டுமே தகவல்களை தர முடியும் என கூறி ஹன்ஸ் ராஜ் மனுவை தள்ளுபடி செய்துவிட்டன.

இதுகுறித்து அவர் மத்திய தகவல் ஆணையத்தில் மேல் முறையீடு செய்தார். எனினும் அவரது மேல் முறையீட்டு மனுவை மத்திய தகவல் ஆணையர் ஸ்ரீதர் ஆச்சாரியாலு தள்ளுபடி செய்துவிட்டார்.

இதனிடையே, நீரஜ் பாண்டே என்பவர் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை குறித்த விவரங்களைக் கேட்டு தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு அளித்தார். இதுகுறித்து விளக்கம் கேட்டு மத்திய தகவல் ஆணையர் ஸ்ரீதர் ஆச்சாரியாலு, முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு கடிதம் எழுதினார்.

இதற்கு பதிலளித்து கடிதம் எழுதிய அரவிந்த் கேஜரிவால், எனது வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை குறித்த விவரங்களை அளிப்பதில் ஆட்சேபம் ஏதும் இல்லை என்றார். ஆனால், அதே நேரத்தில் தகவல் ஆணையத்தின் இரட்டை நிலைப்பாடு குறித்து விமரிசினம் செய்திருந்தார். பிரதமர் நரேந்திர மோடியின் கல்வித் தகுதி குறித்த விவரங்களை வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்காத தகவல் ஆணையம், தன்னுடைய வாக்காளர் அடையாள அட்டை குறித்த விவரங்களை மட்டும் கேட்பது ஏன் என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில் மத்திய தகவல் ஆணையர் ஸ்ரீதர் ஆச்சாரியாலு இன்று வெளியிட்ட உத்தரவில், தில்லி மற்றும் குஜராத் பல்கலைக்கழகங்கள் பிரதமர் நரேந்திர மோடியின் கல்வி தகுதி குறித்த தகவல்களை தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும். இதுவிஷயத்தில் பிரதமர் அலுவலகம் உதவ வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எல்எஸ்ஜி புதிய இலச்சினை மாற்றம்! அணியின் உரிமையாளர் கூறியதென்ன?

தென்னாப்பிரிக்க அணியின் கோட்டையாக மாறிய அகமதாபாத் திடல்!

#T20WC | வான்கடேவில் அதகளப்படுத்திய விண்டேஜ் வெஸ்ட் இண்டீஸ்: இந்தியாவுக்குச் சிக்கல்! |

புதிய கட்சி தொடங்குகிறேன் : கொடியை அறிமுகம் செய்த சசிகலா!

எல்எஸ்ஜி அணியின் புதிய இலச்சினை..! மான்செஸ்டர் ஒரிஜினல் காரணமா?

SCROLL FOR NEXT