ஆனந்திபென் படேலை 'பலியாடு' ஆக்குவதால் பாஜக தப்பித்துவிட முடியாது: ராகுல் காட்டம்
குஜராத் முதல்வர் பதவியில் இருந்து ஆனந்திபென் படேல் ராஜினாமா செய்திருப்பது குறித்து கருத்துக் கூறியுள்ள ராகுல், அவரை பலியாடு ஆக்குவதால் மட்டும் குஜராத்தில் பாஜகவை காப்பாற்றிவிட முடியாது என்று தெரிவித்துள்ளார்.
புது தில்லி: குஜராத் முதல்வர் பதவியில் இருந்து ஆனந்திபென் படேல் ராஜினாமா செய்திருப்பது குறித்து கருத்துக் கூறியுள்ள ராகுல், அவரை பலியாடு ஆக்குவதால் மட்டும் குஜராத்தில் பாஜகவை காப்பாற்றிவிட முடியாது என்று தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலமே பற்றி எரிவதற்கு கடந்த 13 ஆண்டு கால நரேந்திர மோடியின் ஆட்சிதான் காரணம். கடந்த இரண்டு ஆண்டுகளாக குஜராத்தை ஆளும் ஆனந்திபென் படேலின் ஆட்சி இதற்குக் காரணமல்ல. ஆனந்திபென் படேலை பலி கொடுப்பதால் மட்டும் குஜராத்தில் பாஜகவை காப்பாற்றிவிட முடியாது என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
தனது வயது காரணமாக, முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாகவும், இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கவே இந்த முடிவை எடுத்ததாகவும் ஆனந்திபென் படேல் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement