கோல்கத்தாவில் இந்திய விமானப் படையின் பயிற்சி விமானம் விபத்து: விமானிகள் தப்பினர்
கோல்கத்தாவில் இன்று இந்திய விமானப் படைக்கு சொந்தமான பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக இரண்டு விமானிகளும் உயிர் தப்பினர்.
கோல்கத்தா: கோல்கத்தாவில் இன்று இந்திய விமானப் படைக்கு சொந்தமான பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக இரண்டு விமானிகளும் உயிர் தப்பினர்.
மேற்கு மிட்னாப்பூரின் கலைக்குண்டா பகுதியில் உள்ள விமானப் படையின் பயிற்சி நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம், சில நிமிடங்களில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்தில் சிக்கியது.
அதிர்ஷ்டவசமாக, இரு விமானிகளும் விமானம் தரையில் விழுவதற்கு முன்பே அதில் இருந்து குதித்து தப்பிவிட்டனர்.
Advertisement
இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.