முகப்பு
இந்தியா

மகாராஷ்டிராவில் பாலம் இடிந்து விபத்து: உயிரிழப்பு 24 ஆக உயர்வு

மகாராஷ்டிராவில் ஆற்றுப் பாலம் இடிந்து விழுந்ததில் 2 பேருந்துகள், வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது.

Updated On : 6 ஆகஸ்ட், 2016 at 12:14 PM
பகிர்:

மஹாட்: மகாராஷ்டிராவில் ஆற்றுப் பாலம் இடிந்து விழுந்ததில் 2 பேருந்துகள், வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது.

சாவித்ரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டவர்களை தேடும் பணியின் போது, மேலும் 2 உடல்கள் கைப்பற்றப்பட்டதை அடுத்து பலி எண்ணிக்கை 24 ஆக உயர்ந்தது.

ஆற்றின் இருவேறு இடங்களில் இருந்து இரண்டு ஆண்களின் உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இதனால், உயிரிழப்பு 24 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement

மேலும், இப்பகுதியில் தேடும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

ஏற்கனவே மீட்கப்பட்ட 22 உடல்களில் 10 பேர் ரஜப்புர் - போரிவிலி இடையே சென்று கொண்டிருந்த பேருந்தில் பயணித்தவர்கள் என்பதும், ஜைகாட் - மும்பை பேருந்தில் பயணம் செய்த 7 பேரின் உடல்களம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.