மத்தியப் பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி, 7 பேர் படுகாயம்
மத்தியப் பிரதேச மாநிலம், சாட்டர்பூர் மாவட்டத்தில் உள்ள ஜடாசங்கர் அருகே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
புது தில்லி: மத்தியப் பிரதேச மாநிலம், சாட்டர்பூர் மாவட்டத்தில் உள்ள ஜடாசங்கர் அருகே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாகப் பரவலாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால், ஆறுகள் நிரம்பி நீர் வெளியேறி வருகின்றது. இந்நிலையில் சாட்டர்பூர் மாவட்டத்தில் இன்று காலை திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த நிலச்சரிவில் சிக்கி 2 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
Advertisement
இடிபாடுகளில் சிக்கி மேலும் பலர் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.