முகப்பு
இந்தியா

மத்தியப் பிரதேசத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 2 பேர் பலி, 6 பேர் காயம்

மத்தியப் பிரதேசத்தில் அலிராஜ்பூர் மாவட்டத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

Updated On : 10 ஆகஸ்ட், 2016 at 1:15 PM
பகிர்:

அலிராஜ்பூர்: மத்தியப் பிரதேசத்தில் அலிராஜ்பூர் மாவட்டத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

அலிராஜ்பூர் மாவட்டத்தில் நேற்றிரவு 12 மணியளவில்  பிரதமர் நரேந்திர மோடி நிகழ்ச்சியில் பங்கேற்று  திரும்பும் போது பேருந்து நிலைதடுமாறிக் கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் 2 பேர் பலியாகியுள்ளனர், 6 பேர் காயமடைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று பிரதமர் மோடி சுதந்திர போராட்ட வீரர் சந்திரசேகர ஆசத் பிறந்த இடமான பாப்ராவில் அஞ்சலி செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.