இந்தியா

உத்தரப் பிரதேசத்தில் கொடுமை: தலித் சிறுமிக்கு குடிக்கத் தண்ணீர் கொடுக்க மறுத்த பூசாரி கைது

உத்தரப் பிரதேச மாநிலத்தில் தலித் சிறுமிக்குத் தண்ணீர் கொடுக்க மறுத்த விவகாரத்தில் இரண்டு பூசாரியை போலீசார் கைது செய்துள்ளனர்.

ANI

சம்பல்: உத்தரப் பிரதேச மாநிலத்தில் தலித் சிறுமிக்குத் தண்ணீர் கொடுக்க மறுத்த விவகாரத்தில் இரண்டு பூசாரியை போலீசார் கைது செய்துள்ளனர்.

சம்பல் மாவட்டத்தில் குன்னார் என்ற கிராமத்தில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. சிறுமி சுதா. இவர் தன் தந்தையுடன் வயலில் வேலை செய்து வந்தார். சிறுமிக்குத் தண்ணீர் தாகம் எடுத்ததால், தந்தையிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டுள்ளார். இதையடுத்து, சிறுமியின் தந்தை அருகில் உள்ள கோயிலில் வேலை செய்யும் பூசாரியிடம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார்.

அதற்குப் பூசாரி தலித் இனத்தைச் சேர்ந்த உங்களுக்குத் தண்ணீர் வழங்கப்படமாட்டாது என்று கூறியுள்ளார். இதையடுத்து, மகளுக்குத் தண்ணீர் தராத கொடுமையை தட்டிக் கேட்ட விவசாயியைப் பூசாரி தாக்கியுள்ளார். இதன் பின்னர், பூசாரிக்கும் சிறுமியின் தந்தைக்கும் சண்டை மூண்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து விவரம் அறிந்து போலீசார் பூசாரிகள் இருவரைக் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரு சம்பவங்களில் பெண்களிடம் நகை பறிப்பு

சமூகத்தின் உடனடி தேவை உணவு விழிப்புணா்வு! - மருத்துவா் கு. சிவராமன்

தவெகவில் இணைந்த அதிமுக எம்எல்ஏ மகன்

கொடைக்கானலில் கபடிப் போட்டி

பெங்களூரு - நாா்த் ஈஸ்ட் யுனைடெட் ஆட்டம் டிரா!

SCROLL FOR NEXT