ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தாக்குதல்: 5 குழந்தைகள் உட்பட 23 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 5 குழந்தைகள் உட்பட 23 பேர் கொல்லப்பட்டனர்.
காபூல்: ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 5 குழந்தைகள் உட்பட 23 பேர் கொல்லப்பட்டனர்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை குறி வைத்து அந்நாட்டு பாதுகாப்பு படையினர் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தலிபான் பயங்கரவாதிகளும் பதில் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்கள் தெற்கு ஆப்கானிஸ்தான் அந்நாட்டு போலீஸார் நடத்திய தாக்குதலில் 29 தலிபான் பயங்கவாதிகள் கொல்லப்பட்டனர். இதில் தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதலில் பொதுமக்கள் 23 பேர் கொல்லப்பட்டதாக வெள்ளிக்கிழமை போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கப்பட்டது.
Advertisement
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் நேற்று வியாழக்கிழமை கந்தகர் மாவட்டம் நெஸ் உள்ள போலீஸ் சோதனைச் சாவடி மீது தலிபான் பயங்கவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதற்கு போலீஸார் தக்க பதிலடி தந்தனர். இதில் 29 தலிபான் பயங்கவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து அதிக அளவில் ஆயுதங்களும், வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டன.
அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக ஆப்கானிய படைகளுக்கு எதிராக பயங்கரவாதிகள் நடத்திய பதில் தாக்குதலில் 5 குழந்தைகள், 2 பெண்கள் உட்பட 23 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட 23 பேரில் போலீஸாரின் குடும்பத்தை சேர்ந்த 6 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.