முகப்பு
இந்தியா

சும்மா இருக்கவில்லை வருமான வரித்துறை: வரி ஏய்ப்பாளர்களை பிடிக்க  புதிய யுக்தி

வரி ஏய்ப்பாளர்களையும், கருப்புப் பண பதுக்கல்காரர்களையும் பிடிக்க நவீன மின்னணு கண்காணிப்பு முறைகளை வருமான வரித்துறையினர் தற்போது பயன்படுத்தி வருகிறார்கள்.

Updated On : 24 ஜனவரி, 2024 at 6:51 PM
பகிர்:


ஹைதராபாத்: வரி ஏய்ப்பாளர்களையும், கருப்புப் பண பதுக்கல்காரர்களையும் பிடிக்க நவீன மின்னணு கண்காணிப்பு முறைகளை வருமான வரித்துறையினர் தற்போது பயன்படுத்தி வருகிறார்கள்.

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று நவம்பர் 8ம் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து, மின்னணு கண்காணிப்பை தீவிரப்படுத்தி, வரி ஏய்ப்பாளர்களை பிடிக்கும்படி, வருமான வரித்துறையினருக்கு, மத்திய நிதியமைச்சகம் அறிவுறுத்தியது.

மின்னணு கண்காணிப்பு மற்றும் தொலைபேசி பதிவுகள் மூலமாகத்தான் மிகப்பெரிய கருப்புப் பண முதலைகளை வருமான வரித்துறை கண்டறிந்து வருகிறது.

இந்த எலிப்பொறி மூலமாகத்தான், மிகப்பெரிய பெருச்சாளிகள் கடந்த சில நாட்களாக வருமான வரித்துறையின் அதிரடி சோதனையில் சிக்கி வருகிறார்கள். தொடர்ந்து அதிரடி சோதனைகளும் நடத்தப்பட உள்ளன.

கடந்த மாதம், பெங்களூரில் ஒரு கட்டுமான நிறுவனத்தின் கதவை தட்டிய வருமான வரித் துறையினர், சட்டத்துக்கு புறம்பாக நடக்கும் வணிகம் குறித்து நடந்த உரையாடல்களும், குறுஞ்செய்திகளையும் பதிவு செய்துகொண்டு திரும்பினர். அதன் பின்னணியில் நடந்த விசாரணையில்தான், இரண்டு நாட்களுக்கு முன்பு பெங்களூரில் 4 கோடி அளவுக்கு புதிய ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.

மின்னணு கண்காணிப்பையும், தொலைபேசி உரையாடல் பதிவையும் தீவிரப்படுத்துமாறு மத்திய நிதியமைச்சகம் தங்களை வலியுறுத்தியிருப்பதை வருமான வரித்துறை அதிகாரி உறுதி செய்துள்ளார்.

ஏற்கனவே மின்னணு கண்காணிப்பு முறை இருந்தாலும், அதனை பயன்படுத்தி வரி ஏய்ப்பாளர்களை பிடிக்கும் நடைமுறை இப்போதுதான் பின்பற்றப்படுகிறது.
இதே முறையில் ஹவாலா மோசடியில் ஈடுபடுவோரையும், கருப்புப் பணத்தை கைமாற்றும் தரகர்களையும் பிடிக்கும்படி வருமான வரித்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →