இந்தியா

மத்திய உள்துறை அமைச்சருடன் தமிழக ஆளுநர் சந்திப்பு

DIN

தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிந்தைய அரசியல் சூழ்நிலை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் மகாராஷ்டிர ஆளுநரும் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநருமான வித்யாசாகர் ராவ் ஆலோசனை நடத்தினார்.
இரண்டு நாள் பயணமாக வித்யாசாகர் ராவ் தில்லிக்கு வியாழக்கிழமை வந்தார். தமிழக பொறுப்பு ஆளுநராக உள்ளதால், அவர் தில்லியில் உள்ள தமிழ்நாடு அரசு விருந்தினர் இல்லத்துக்கு வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தின் முழு நேர ஆளுநராக அவர் பதவி வகித்து வருவதால், தில்லி கே.ஜி.மார்க்கில் உள்ள மகாராஷ்டிர மாநில அரசு விருந்தினர் இல்லமான மகாராஷ்டிர சதனுக்கு சென்று தங்கினார்.
அவரது பயணத் திட்டம் குறித்து அதிகாரிகளிடம் விசாரித்த போது, "மத்திய சாலை, நெடுஞ்சாலை, கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியின் இளைய மகள் கேட்கியின் திருமண வரவேற்பு நிகழ்வு தில்லியில் வியாழக்கிழமை இரவு நடைபெறவுள்ளது. அதில் பங்கேற்பதற்காக வித்யாசாகர் ராவ் தில்லி வந்துள்ளார். வெள்ளிக்கிழமை காலையில் அவர் ஹைதராபாத் புறப்படுகிறார்' என்று தெரிவித்தனர்.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை அக்பர் சாலையில் உள்ள அவரது இல்லத்துக்கு மாலையில் சென்று வித்யாசாகர் ராவ் சந்தித்துப் பேசினார். சுமார் 20 நிமிடங்கள் இச்சந்திப்பு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, நிதின் கட்கரி இல்ல திருமண வரவேற்பு நிகழ்வில் அவர் கலந்து கொண்டார். முன்னதாக, வித்யாசாகர் ராவிடம் ராஜ்நாத் சிங்குடனான சந்திப்பு குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர், "தமிழகத்தில் அமைதி நிலவுகிறது. ஜெயலலிதா மறைவுக்குப் பிந்தைய அரசியல் சூழ்நிலை குறித்து உள்துறை அமைச்சருடன் பேசினேன். மாநில அரசியல் நிலைமை குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை ஏதும் தாக்கல் செய்யவில்லை. இதுபோன்ற நடவடிக்கைகள் வழக்கமான ஒன்றுதான்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 5-இல் நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 6,120 போ் எழுதுகின்றனா்

ராஜா வாய்க்காலுக்கு தண்ணீா் திறக்க விவசாயிகள் கோரிக்கை

ரூ. 11.30 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

கணினிவழிக் குற்றங்கள் அதிகரிப்பு: பொதுமக்களுக்கு எஸ்.பி. எச்சரிக்கை

சிபிசில் நிறுவனத்தை கண்டித்து இரண்டாவது நாளாக உண்ணாவிரதம் மூதாட்டி மயக்கம்

SCROLL FOR NEXT