முகப்பு
இந்தியா

சுஷ்மா ஸ்வராஜுக்கு சிறுநீரக மாற்று சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது!

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று சிறுநீரக மாற்று சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது

Dinamani
Updated On : 24 ஜனவரி, 2024 at 6:53 PM
பகிர்:

புதுதில்லி: மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று சிறுநீரக மாற்று சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது

நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் வெளியுறவுத் துறை அமைச்சராக இருப்பவர் சுஷ்மா ஸ்வராஜ். கடந்த சிலமாதங்களாக அவர் சிறுநீரக செயல்பாட்டு பாதிப்பினால் அவதிப்பட்டு வந்தார். தேவைப்படும் போது அவ்வப்போது மருத்துவமனைகளில் சிசிச்சை பெற்று வந்தார். அதுபோல தேவைக்கு ஏற்ப டயாலிசிஸ் சிகிச்சையும் அவருக்கு அளிக்கப்பட்டு வந்தது.

தற்போது 64 வயதாகும் சுஷ்மா கடந்த நவம்பர் 7-ஆம் தேதி தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.  அதுபற்றிய தகவலை அவர் நவம்பர் 16-ஆம் தேதி தனது டிவிட்டர்  பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

முதலில் சுஷ்மாவின் மகளின் சிறுநீரகத்தை அவருக்கு பொருத்தலாம் என்ற ஆலோசனை மருத்துவர்களால் நிராகரிக்கப்பட்டது. அவரது மகளுக்கும் சர்க்கரை நோய் பாதிப்பு இருப்பதும், அவர் உடல் பருமனால் அவதிப்பட்டு வருவதும் இதற்கு காரணமாக கூறப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து வேறொருவர் மூலமாக அவருக்கு சிறுநீரகம் ஏற்பாடு செய்யப்பட்டது. எனவே இன்று காலை 8.30 மணி அளவில் தொடங்கிய சிறுநீரக மாற்று சிகிச்சையானது மதியம் 2.30 மணி அளவில் முடிவடைந்ததாக  தகவல்கள் தெரிவிக்கின்றன.

எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் எம்.சி.மிஸ்ரா மற்றும் துணை டீன் வி.கே.பன்சல் ஆகிய இருவர் தலைமையிலான மருத்துவர்கள் குழுவானது இந்த சிகிச்சையை மேற்கொண்டது.    

முழு கட்டுரையைப் படிக்க →